இந்தியா: 6.22-இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை93 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
விவோ வ்யை93 சாதனம் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு அம்சம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விவோ நிறுவனம் இன்று விவோ வ்யை93 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா அம்சம், செயற்நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள், கைரேகனை ஸ்கேனர் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக விவோ வ்யை93 ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

டிஸ்பிளே:
விவோ வ்யை93 ஸ்மார்ட்போன் மாடல் 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520×720
பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகதம் அடிப்படையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:
விவோ வ்யை93 சாதனம் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு அம்சம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மீடியா-டெக்
இக்கருவி ஆக்டோ-கோர் மீடியா-டெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஃபன் டச் ஒஎஸ் 4.5 இயங்குதள ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி-விலை:
இந்த ஸ்மார்ட்போனில் 4030எம்ஏஎச் பேட்டரி மற்றும் பலவேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. பின்பு ரூ.13,990
விலையில் விவோ வ்யை93 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications