விவோ வ்யை93 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்திய சந்தையில் தொடர்ந்து பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலைகள் குறைந்த வண்ணம் உள்ளது. நேற்று சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் விலை குறைந்ததை தொடர்ந்து, இன்று விவோ வ்யை93 ஸ்மார்ட்போன் மாடலின் விலையும்குறைக்கப்பட்டுள்ளது.

விலைகுறைக்கப்பட்ட விவோ வ்யை93 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் வலைதளத்தில் வாங்க முடியும், இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,990-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.12,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
விவோ வ்யை93 ஸ்மார்ட்போன் மாடல் 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520×720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகதம் அடிப்படையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:
விவோ வ்யை93 சாதனம் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு அம்சம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மீடியா-டெக்
இக்கருவி ஆக்டோ-கோர் மீடியா-டெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஃபன் டச் ஒஎஸ் 4.5 இயங்குதள ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி:
இந்த ஸ்மார்ட்போனில் 4030எம்ஏஎச் பேட்டரி மற்றும் பலவேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








