விவோ Y91i ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது.. இனி இந்த ரேட்டில் வாங்கலாம்..

|

விவோ நிறுவனம் நிறுவனம் தற்பொழுது அதன் இந்திய வடிகளர்களுக்கு ஒரு நற்செய்தியை வெளியிட்டுள்ளது. விவோ நிறுவனம் இந்தியாவில் தனது Y91i ஸ்மார்ட்போனின் விலையைச் சற்று குறித்துள்ளதாக அறிவித்துள்ளது. விவோ அறிவித்துள்ள புதிய விலை என்ன என்ற விபரத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

 விவோ Y91i ஸ்மார்ட்போன்

விவோ Y91i ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் உண்மை தான் என்பது அந்நிறுவனத்தின் வலைத்தளத்தின் வழி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விவோ Y91i ஸ்மார்ட்போனின் விலை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் மாற்றப்பட்டுவிட்டது. இந்த விவோ Y91i ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல்கள்

ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல்கள்

விவோ Y91i ஸ்மார்ட்போன் 2ஜிபி மற்றும் 16 ஜிபி வேரியண்ட் மாடலாகவும், 2 ஜிபி மற்றும் 32 ஜிபி வேரியண்ட் மாடலாகவும் மற்றும் 3 ஜிபி மற்றும் 32 ஜிபி வேரியண்ட் மாடல் என்று மொத்தம் மூன்று வேரியண்ட் மாடலாக விற்பனைக்குக் கிடைக்கிறது. இப்பொழுது வரை இந்த ஸ்மார்ட்போன்கள் அதன் அசல் விற்பனை விலையில் மட்டுமே அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

WhatsApp மற்றும் ShareChat ஸ்டேட்டஸ் வீடியோவை எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி ? சீக்ரெட் டிப்ஸ்.!

ரூ.500 விலை குறைப்பு

ரூ.500 விலை குறைப்பு

விவோ நிறுவனத்தின் சமீபத்திய விலை குறைப்பு அறிவிப்பிற்கு பின்னர் விவோ Y91i போனின் 3 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ.500 விலை குறைக்கப்பட்டு இப்பொழுது ரூ. 8490 என்ற புதிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை விவோ வலைதளம், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் மாற்றப்பட்டுவிட்டது. இந்த விவோ Y91i மாடல் இதற்கு முன்பு ரூ. 8999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் ரூ. 7490 விலையில் புதிய போன்

வெறும் ரூ. 7490 விலையில் புதிய போன்

அதேபோல், இந்த விவோ Y91i ஸ்மார்ட்போன் மாடலின் 2 ஜிபி + 16 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் இப்பொழுது வெறும் ரூ. 7490 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் 2 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் ரூ. 7,999 என்ற விலையில் இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் விற்பனை தளங்களில் வாங்கக் கிடைக்கிறது. இந்த சலுகையை நீங்களும் பயன்படுத்திக்கொல்லாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo Y91i Gets a Rs. 500 Price Drop for the 3GB + 32GB Storage Variant Model : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X