ரூ.7,990-விலையில் விவோ91ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போனின் சேமிப் பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம்.
இந்திய சந்தையில் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்க்ள அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. அந்த வரிசையில் விவோ நிறுவனம் தனது விவோ91ஐ ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த
ஸ்மார்ட்போன் மாடல் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக உள்ளது.

விவோ நிறுவனம் இதற்குமுன்பு விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். தற்சமயம் அறிமுகம் செய்துள்ளது விவோ91ஐ ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
விவோ91ஐ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.22-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் தில்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த கருவி வெளிவந்துள்ளது. குறிப்பாக வாட்டர் டிராப் நாட்ச்
டிஸ்பிளே இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சிப்செட்:
விவோ91ஐ ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போனின் சேமிப் பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம்.

கேமரா:
விவோ91ஐ ஸ்மார்ட்போனில் 13எம்பி +2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி-விலை:
விவோ91ஐ சாதனத்தில் 4030எம்எஏச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் ரூ.7,990-விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications