பட்ஜெட் விலையில் Vivo Y91C 2020 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
விவோ நிறுவனம் தனது புதிய விவோ நிறுவனம் தனது புதிய விவோ Y91C 2020 என்ற ஸ்மார்ட்போன் மாடலை பங்களாதேஷில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விரைவில் விவோ Y91C 2020 சாதனம் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ ஒய் 91சி 2020 ஸ்
விவோ நிறுவனத்தின் விவோ ஒய் 91 சி 2020 ஸ்மார்ட்போன் மாடல் 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டுள்ளது, பின்பு 722 × 1520 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்துடன் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி
விவோ நிறுவனத்தின் விவோ ஒய் 91 சி 2020 ஸ்மார்ட்போன் மாடல் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஃப்யூஷன் பிளாக் மற்றும் ஓஷன் ப்ளூ ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களின் கீழ் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

13எம்பி ரியர் கேமரா
விவோ ஒய் 91 சி 2020 ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா அமைப்பு மட்டுமே இடம்பெற்றுள்ளது, அதன்படி 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீகேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் எல்இடி பிளாஸ்,உள்ளிட்ட சில ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். ஃபேஸ் பியூட்டி, டைம்-லேப்ஸ், பால்ம் கேப்சர் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் ஆகியவற்றை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் கேமரா.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
விவோ ஒய் 91 சி 2020 ஸமார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி இடம்பெற்றுளளது, மேலும் ஃபன்டச் ஓஎஸ் 4.5 கொண்டு இயங்குகிறது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பை மிகவும் அருமையாக உள்ளது.ஆனால் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

4030எம்ஏஎச் பேட்டரி
இந்த விவோ ஒய் 91 சி 2020 சாதனத்தில் 4030எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் பாஸ்ட்ஸ் சார்ஜிங் ஆதரவைக்
கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் டூயல் சிம், 4ஜி வோல்டிஇஇ வைஃபை 802.11, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ்10 க்ளோனாஸ், எஃப்எம் ரேடியோ,
3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

விவோ ஒய் 91 சி 2020
இந்த சாதனம் அளவீட்டில், 155.11 x75.09 x 8.28 மிமீ மற்றும் 163.5 கிராம் எடையும் கொண்டுள்ளது, மேலும் விவோ ஒய் 91 சி 2020சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.8400-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications