அசத்தலான இரண்டு விவோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
விவோ நிறுவனம் தனது இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விரைகுறைப்பை அறிவித்துள்ளது, இந்த சலுகைய பல்வேறு மக்களும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இப்போது விலைகுறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் விவோ Y91, விவோ Y91i ஆகும்.

விலைகுறைப்பு.!
விவோ Y91 ஸ்மார்ட்போனின் முந்தயை விலை ரூ.8,990-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,490-விலையில்
விற்பனை செய்யப்படுகிறது. அதபோல் விவோ விவோ Y91i ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.7,490-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைக் குறைப்பு தற்போது brick மற்றும் mortar ஸ்டோர்களில் மட்டுமே உள்ளது. மற்ற ஈ-காமர்ஸ் தளங்களில் விலை குறைக்கப்படவில்லை.

விவோ வ்யை91 டிஸ்பிளே
விவோ வ்யை91 ஸ்மார்ட்போன் மாடல் 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 720 x 1520பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கருவி ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி2 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ வ்யை91 கேமரா
விவோ வ்யை91 ஸ்மார்ட்போன் பொதுவாக 13எம்பி+ 2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இதனுள் அடக்கம். விவோ வ்யை91 ஸ்மார்ட்போனில்
4030எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விவோ91ஐ டிஸ்பிளே
விவோ91ஐ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.22-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல்திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த கருவி வெளிவந்துள்ளது. குறிப்பாக வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே இவற்றுள்இடம்பெற்றுள்ளது. விவோ91ஐ ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ91ஐ கேமரா
விவோ91ஐ ஸ்மார்ட்போனில் 13எம்பி +2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி
பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. விவோ91ஐ சாதனத்தில் 4030எம்எஏச்பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications