3ஜிபி ரேம் வசதியுடன் விவோ வ்யை91 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!
விவோ வ்யை91 ஸ்மார்ட்போன் மாடல் 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
விவோ நிறுவனம் 3ஜிபி ரேம் வசதியுடன் விவோ வ்யை91 ஸ்மார்ட்போன் மாடலை தற்சமயம் அறிமுகம் செய்துள்ளது, இதற்குமுன்பு 2ஜிபி ரேம் வசதியுடன் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 3ஜிபி ரேம் கொண்ட விவோ வ்யை91 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,990-ஆக உள்ளது.

டிஸ்பிளே:
விவோ வ்யை91 ஸ்மார்ட்போன் மாடல் 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 720 x 1520பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:
இக்கருவி ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி2 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:
விவோ வ்யை91 ஸ்மார்ட்போன் பொதுவாக 13எம்பி+ 2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இதனுள் அடக்கம்.

சேமிப்பு:
இந்த ஸ்மார்டபோனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு விவோ வ்யை91 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி
விவோ வ்யை91 ஸ்மார்ட்போனில் 4030எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications