ஃபேஸ் அன்லாக் வசதியுடன் அசத்தலான விவோ வ்யை83 அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்க்க்பட்ட விவோ வ்யை83 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிவப்பு, வெள்ளை,கருப்பு போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஃபேஸ் அன்லாக் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இக்கருவி ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா வசதி மட்டுமே இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.15,900-ஆக உள்ளது.

விவோ வ்யை83 :
விவோ வ்யை83 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.22-இன்ச் ஐபிஎஸ் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,அதன்பின் 720x1520பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள்ள இடம்பெற்றுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
விவோ வ்யை83 ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹெலியோ பி22 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த வ்யை83 ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா
8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

பேட்டரி :
விவோ வ்யை83 ஸ்மார்ட்போனில் 3260எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications