ரெட்மீ நோட் 5 ப்ரோ-க்கு ரூ.14,990/-க்கும், ஐபோன் X-க்கு ரூ.ரூ.35,990/-க்கும் வெடி வைத்த விவோ.!

இந்த ஸ்மார்ட்போனின் இதர அம்சங்கள் என்ன.? எப்போது சந்தையில் வாங்க கிடைக்கும்.? இதை நம்பி வாங்கலாமா.?

|

சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான விவோ இந்தியாவில் விவோ Y83 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாகவும்,இந்த ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் சில்லறை விற்பனையகத்தில் ரூ.14,990/-க்கு விற்பனையாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அறியாதோர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் தொடங்கப்பட்டதும், இது மீடியா டெக் Helio P22 சிப்செட் கொண்டு இயங்கும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனின் இதர அம்சங்கள் என்ன.? எப்போது சந்தையில் வாங்க கிடைக்கும்.? இதை நம்பி வாங்கலாமா.? என்பதை பற்றி விரிவாக காணலாம்.

இது வெளியானால் எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் காலியாகும்.?

இது வெளியானால் எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் காலியாகும்.?

விவோ Y83 ஸ்மார்ட்போன் ஆனது, மிட் ரேன்ஜ் பிரிவின் கீழ் வெளியாகும் என்பதால், அதே விளைநிர்ணயத்தின் கீழ் வாங்க கிடைக்கும் சியோமி நிறுவனத்தின் ரெட்மீ நோட் 5 ப்ரோ மற்றும் அசுஸ் நிறுவனத்தின் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஆகிய ஸ்மார்ட்போன்கள் கடுமையான போட்டியை சந்திக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

6.22 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்பிளே.!

6.22 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்பிளே.!

முன்னர் கூறியபடியே வியோ Y83 ஆனது MediaTek Helio P22 சிப்செட் உடன் வரும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இது AI திறன் கொண்ட பட்ஜெட் சிப்செட் ஆகும். இந்த சிப்செட் ஒரு வாரம் முன்பு தான் வெளிவந்தது. Y83 ஸ்மார்ட்போனின் இதர நன்மைகளை பொறுத்தவரை, இது 720 x 1520 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு 6.22 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. விவோ இந்த டிஸ்பிளேவை புல் வியூ 2.0 என்று அழைக்கிறது.

டூயல் 4ஜி ஆதரவை வழங்கும்.!

டூயல் 4ஜி ஆதரவை வழங்கும்.!

4 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை சேமிப்பு விரிவாக்கம் ஆதரவுடன்கூடிய 32ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்ட் மற்றும் டூயல் சிம் ஆதரவையும் கொண்டுள்ளது. இதன் மீடியா டெக் ஹீலியோ பி22 சிப்செட் ஆனது டூயல் 4ஜி ஆதரவை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ.!

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ.!

4ஜி LTE, VoLTE, வைஃபை 802.11 b / g / n, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் போன்ற இணைப்பு அம்சங்களை கொண்டுள்ள விவோ Y83 ஆனது ஒரு 13 எம்பி பின்பக்க கேமரா மற்றும் ஒரு 8 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இதன் கேமரா பேஸ் அன்லாக் அம்சத்துடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அடிப்படையிலான FunTouch 4.0 கொண்டு இயங்குகிறது. இந்த முழு தொகுப்பும், ஒரு 3260mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. சுமார் 151 கிராம் எடையை கொண்டுள்ளது.

உடனடியாக வெளியாகுமா.?

உடனடியாக வெளியாகுமா.?

விவோ நிறுவனம் சமீபத்தில் அதன் விவோ X21 ஸ்மார்ட்போனை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது என்பதால், உடனடியாக அடுத்த ஸ்மார்ட்போனை வெளியிட சிறிது காலம் எடுத்துக்கொள்ளும் என்பதால், அந்த வெளியீட்டு தேதி சார்ந்த விவரங்கள் அடுத்த வாரம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ X21-ன் அம்சங்கள்.!

விவோ X21-ன் அம்சங்கள்.!

இந்த ஸ்மார்ட்போன் அதன் டிஸ்பிளேவில் ஒரு 3D கண்ணாடி உடல் வடிவமைப்பை கொண்டுள்ளது. இதன் விளைவாக, இந்த ஸ்மார்ட்போன் 85.2% என்கிற ஒரு சுவாரஸ்யமான ஸ்க்ரீன்-டூ-படி விகிதத்தை வழங்குகிறது. அதாவது இது 6.28 இன்ச் AMOLED டிஸ்பிளே மற்றும் ஒரு முழு HD+ அளவிலான 1080 x 2280 தீர்மானம் மற்றும் 19: 9 என்கிற அளவிலான திரை விகிதம் ஆகியவைகளை கொண்டிருக்கும்.

சேமிப்பு.!

சேமிப்பு.!

ஒரு இடைப்பட்ட ஸ்னாப்டிராகன் 660 Octa-core செயலி உடனாக ஒரு Adreno 512 ஜிபியூ கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், மேற்கூறியபடி 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என்கிற சேமிப்பு வகைகளின் கீழ் 6 ஜிபி ரேம் கொண்டு இயங்கும். உள்ளக சேமிப்பிடத்தை விரிவாக்கும் திறனுடன் ஹைபிரிட் டூயல் சிம் ஆதரவும் கொண்டிருக்கும். ரூ.35,990/-கு ப்ளிப்கார்ட் தளத்தில் வாங்க கிடைக்கிறது.

கேமரா.!

கேமரா.!

இமேஜிங் துறையை பொறுத்தவரை, Vivo X21 அதன் பின்புறத்தில் ஒரு 12 எம்பி + 5 எம்பி என்கிற இரட்டை கேமரா அமைப்பு கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, 24 எம்பி ரெசல்யூஷன் அளவிலான புகைப்படங்களை கைப்பற்றும் திறன் கொண்ட ஒரு 12 எம்பி செல்பீ உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் சிறந்த ஆடியோ தரத்திற்கான AK4376A Hi-Fi ஆடியோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
ஓஎஸ் மற்றும் பேட்டரி.!

ஓஎஸ் மற்றும் பேட்டரி.!

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவை அடிப்படையாக கொண்ட Funtouch OS 4.0 கொண்டு இயக்கப்படும் இந்த விவோ X21 ஆனது, பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான ஒரு 3200mAh திறன் கொண்ட பேட்டரி மூலம் ச்கதியூட்டப்படுகிறது. மேலும் பல விவோ ஸ்மார்ட்போன்கள் சார்ந்த அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவின் கீழ் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Vivo Y83 With Android 8.0 Oreo and 6.2-inch HD+ Display Launched at Rs 14,990. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X