டிசம்பர் 7: ரூ.7,999-விலையில் களமிறங்கும் விவோ வ்யை81ஐ.!
இந்த ஸ்மார்ட்போனில் 3260எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம். குறிப்பாக ரூ.9,999-விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.
விவோ நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் டிசம்பர் 7-ம் தேதி விவோ வ்யை81ஐ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது,மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட மற்றும் அமேசான் போன்ற வலைதளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐபோனில் இருக்கும் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ வ்யை81ஐ ஸ்மார்ட்போன், மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
விவோ வ்யை81ஐ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.22-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1520×720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

சேமிப்பு:
இக்கருவி 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக கைரேகை சென்சார் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்
அடக்கம்.

மீடியாடெக்:
விவோ வ்யை81ஐ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் எம்டி6761 சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ரய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, பின்பு இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:
விவோ வ்யை81ஐ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும். பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இவற்றுள் அடக்கம்.

விலை:
இந்த ஸ்மார்ட்போனில் 3260எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம். குறிப்பாக ரூ.9,999-விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








