அபார சலுகையில் விவோ ஸ்மார்ட்போன்கள் விற்பனை.!
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து பல புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது.
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து பல புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது.

அதனைத் தொடர்ந்து விவோ நிறுவனம் தனது முந்தைய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அபாரமான சலுகைகளை அறிவித்துள்ளது.

விவோ சலுகை
விவோ வொய்81 ஸ்மார்ட்போன் மற்றும் விவோ வொய்71i ஸ்மார்ட்போன்களுக்கு, அதன் அசல் விலையிலிருந்து ரூ.1000 தள்ளுபடியை விவோ நிறுவனம் வழங்கியுள்ளது. விவோ வொய்81 ஸ்மார்ட்போன் மற்றும் விவோ வொய்71i ஸ்மார்ட்போன் தற்பொழுது சலுகை விலையில் அமேசான், பிளிப்கார்ட் தளம் மற்றும் விவோ ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

விவோ வொய்81
விவோ வொய்81 ஸ்மார்ட்போன் இன் 3ஜிபி ரேம் வேரியண்ட் தற்பொழுது சந்தையில் ரூ.10,990 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் விவோ வொய்81 ஸ்மார்ட்போன் இன் 4ஜிபி ரேம் வேரியண்ட் தற்பொழுது வெறும் ரூ.12,490 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விவோ வொய்81 ஸ்மார்ட்போன் கோல்டு மற்றும் பிளாக் நிறத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது. விவோ வொய்81 ஸ்மார்ட்போன் இன் அசல் விலை ரூ.13,490 என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ வொய்71i
விவோ வொய்71i ஸ்மார்ட்போன் தற்பொழுது சலுகை விலையில் ரூ.7,990 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விவோ வொய்71i ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் கோல்டு மற்றும் மேட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.

விவோ வொய்81 விபரக்குறிப்பு:
- 6.22' இன்ச் எச்.டி பிளஸ் உடன் கூடிய 720x1520 பிக்ஸல் கொண்ட 19:9 விகித டிஸ்பிளே
- 3ஜிபி ரேம் மற்றும் 34ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- ஆக்டா கோர் மீடியாடெக் MT6762 சிப்செட்
- மைக்ரோ எஸ்.டி கார்டு மூலம் 256 ஜிபி வரை விரிவாக்கம்
- ஃபண்டச் ஓ.எஸ். 4.0 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளம்
- 13 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க கேமரா
- 5 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா
- டூயல் நானோ சிம்
- 3260 ஏ.ஏ.எச் பேட்டரி

விவோ வொய்71i விபரக்குறிப்பு:
- 5.99' இன்ச் எச்.டி பிளஸ் உடன் கூடிய 720x1520 பிக்ஸல் கொண்ட 19:9 விகித டிஸ்பிளே
- 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்
- மைக்ரோ எஸ்.டி கார்டு மூலம் 256 ஜிபி வரை விரிவாக்கம்
- ஃபண்டச் ஓ.எஸ். 4.0 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளம்
- 8 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க கேமரா
- 5 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா
- டூயல் நானோ சிம்
- 3360 ஏ.ஏ.எச் பேட்டரி


Click it and Unblock the Notifications