விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் விவோ Y7x ஸ்மார்ட்போன் மாடல்.!
விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ Y7x ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த விவோ Y7x ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ Y7x ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.44-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான விவோY7x ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ Y7x ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி96 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். குறிப்பாக கேமிங் வசதிக்கு இந்த ஸ்மார்ட்போன் மிக அருமையாகஇருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

இந்த விவோ Y7x ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவோ Y7x ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த சாதனம்
சிறந்த மென்பொருள் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

விவோY7x ஸ்மார்ட்போன் ஆனது ரூ.18,000-விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைரேகை
சென்சார் உட்பட பல அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்நிறுவனம் விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போனை
வரும் பிப்ரவரி 9-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இப்போது விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப்
பார்ப்போம்.

விவோ டி1 5ஜி
விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸபிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த சாதனம் 2400×1080 பிக்சல்கள் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன்வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் சிறந்த வடிவமைப்புடன் வெளிவரும்.

குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் ஆதரவுடன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என
மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே இந்தஸ்மார்ட்போன் 16எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவரும்.

விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும். அதேபோல் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் கைரேகை சென்சார் உட்பட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இந்த விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது
நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

5ஜி,4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி5.1, யூ.எஸ்.பி டைப்-சி, ஜி.பி.எஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் உட்படபல இணைப்பு
ஆதரவுகளை கொண்டுள்ளது விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications