சத்தமின்றி அறிமுகமான 24எம்பி செல்பீ கேம் கொண்ட விவோ ஸ்மார்ட்போன்.!
அறிமுகமாகியுள்ள விவோ வ்யை79 ஸ்மார்ட்போனில் பேஸ் வேக் (Face Wake) அம்சமும் இடம்பெற்றுள்ளது.
விவோ நிறுவனம் மிகவும் அமைதியாக அதன் புதிய வ்யை - தொடர் வரிசையில், வ்யை79 (Vivo Y79) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் வெளியான வி7ப்ளஸ் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும்ளை அதன் 5.99 அங்குல (18: 9 விகிதம்) டிஸ்பிளே அம்சத்தினை கொண்டுள்ளது.

அறிமுகமாகியுள்ள விவோ வ்யை79 ஸ்மார்ட்போனில் பேஸ் வேக் (Face Wake) அம்சமும் இடம்பெற்றுள்ளது. இந்த அம்சம் சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ் மற்றும் எல்ஜி க்யூ6 உள்ளிட்ட இடைப்பட்ட ஸ்மார்ட்போன்களிலும் இடம்பெறுகிறதென்பது குறிப்பிடத்தக்கது

24 மெகாபிக்சல் செல்பீ கேமரா
இந்த ஸ்மார்ட்போனின் மிக பெரிய சிறப்பம்சமாக அதன் 24 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. மேலும் நிறுவனத்தின் கூற்றின்படி, விவோ வ்யை79 ஆனது 84.4 சதவீதம் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம் கொண்டுள்ளது.

விலை
தற்போது சீனாவில் வாங்க கிடைக்கும் இக்கருவியின் இந்திய விலை நிர்ணயமானது சுமார் ரூ.24,500/- என்ற புள்ளியை எட்டாலாம். நிறுவனத்தின் சொந்த வலைத்தளத்தில் இருந்து வாங்க கிடைக்கும் இக்கருவி 11/11 அன்று அதன் ஷிப்பிங்கை தொடங்கும் என்று விவோ அறிவித்துள்ளது.

மூன்று வண்ண மாறுபாடுகளில் கிடைக்கும்
ஷாம்பெயின், மேட் பிளாக் மற்றும் ரோஸ் கோல்ட் ஆகிய மூன்று வண்ண மாறுபாடுகளில் கிடைக்கும் இக்கருவி கார்னிங் கொரில்லா கண்ணாடி 3 பாதுகாப்பு மற்றும் 2.5 டி வளைந்த கண்ணாடி கொண்ட 18: 9 விகிதம் அளவிலான 5.99-அங்குல எச்டி ப்ளஸ் (720x1440 பிக்சல்கள்) ஐபிஎஸ் இன்செல் 'புல்வியூ' டிஸ்பிளே கொண்டுள்ளது.

16 மெகாபிக்சல் பின்புற கேமரா
2ஜிகாஹெர்ட்ஸ் உடனான க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 (எம்எஸ்எம் 8953) ஆக்டா-கோர் எஸ்ஓசி மற்றும் 4 ஜிபி ரேம் உடன் இணைந்துள்ளது. கேமராத்துறையை பொறுத்தமட்டில், ஒரு 24-மெகாபிக்சல் முன் கேமராபக்க கேமரா (எப் / 2.0 துளை, 1 / 2.78-அங்குல சென்சார், மற்றும் ஒரு 'மூன்லைட் க்ளோ' சாப்ட் [பிளாஷ்) கொண்டுள்ளது மறுகையில் எப் / 2.0 துளை மற்றும் இரட்டை எல்இடி ப்ளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு
மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ள இக்கருவி வைஃபை, ப்ளூடூத் வி4.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ- யூஎஸ்பி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எஃப்.எம் ரேடியோ ஆகிய இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

பேட்டரி
ஆக்சலேரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், டிஜிட்டல் காம்பஸ், ப்ராக்சிமிட்டி சென்சார் ஆகிய சென்சார்களை தன்னுள் கொண்டுள்ள இக்கருவி அளவீட்டில் 155.8x75.7x7.7 மிமீ மற்றும் 160 கிராம் எடையுடையது. இது 3225எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இதில் நிறுவனத்தின் ஏகே4376எ ஹைஃபை ஆடியோ சிப்செட் சேர்க்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications