Home
Mobile

5.99 இன்ச் ஃபுல் வியூ டிஸ்பிளே; 24எம்பி செல்பீ கேமராவுடன் விவோ Y79.

அம்சங்களை பொறுத்தமட்டில், சிப்செட் தவிர விவோ வி7ப்ளஸ் கொண்டுள்ள கொண்டிருந்தே அதே அம்சங்களைத்தான் கொண்டுள்ளது.

By Muthuraj

சீனாவில் விவோ வ்யை79 (Vivo Y79) என பெயரிடப்பட்டுள்ள ஒரு புதிய ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் வ்யை வரிசையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவோ வ்யை79 ஆனது சுமார் ரூ.24,637/- என்ற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.

5.99 இன்ச் ஃபுல் வியூ டிஸ்பிளே; 24எம்பி செல்பீ கேமராவுடன் விவோ Y79!

இது சீனாவில் நவம்பர் 11 முதல் விற்பனைக்கு கிடைக்கும். பிளாக், ரோஸ் கோல்ட், மேட் பிளாக் மற்றும் சாம்பெயின் கோல்ட் ஆகிய நிற விருப்பங்களில் கிடைக்கும் இக்கருவியானது விவோ மால், விவோவின் அதிகாரபூர்வமான கடைகளில் ஏற்கனவே முன்பதிவுகளுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

மறுசீரமைக்கப்பட்ட மாறுபாடு.!

மறுசீரமைக்கப்பட்ட மாறுபாடு.!

விவோ வ்யை79 ஸ்மார்ட்போன் அடிப்படையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ வி7ப்ளஸ் ஸ்மார்ட்போனின் மறுசீரமைக்கப்பட்ட மாறுபாடு ஆகும். விவோ வ்யை79 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், சிப்செட் தவிர விவோ வி7ப்ளஸ் கொண்டுள்ள கொண்டிருந்தே அதே அம்சங்களைத்தான் கொண்டுள்ளது.

84.4 சதவிகிதம் ஸ்க்ரீன்-டூ-பாடி.!

84.4 சதவிகிதம் ஸ்க்ரீன்-டூ-பாடி.!

அதாவது வ்யை79 ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி கொண்டுள்ளது வொவோ வி7ப்ளஸ் ஆனது ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் கொண்டு வருகிறது. ஒரு உலோக யூனிபாடி வடிவமைப்பு கொண்டு வரும் இக்கருவி 5.99 அங்குல முழு காட்சி எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. இது 18: 9 என்ற விகிதத்தில், ஒரு 84.4 சதவிகிதம் ஸ்க்ரீன்-டூ-பாடி என்ற விகிதத்தை கொண்டுள்ளது.

24 மெகாபிக்சல் மூன்லைட் செல்பீ கேமரா.!

24 மெகாபிக்சல் மூன்லைட் செல்பீ கேமரா.!

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பிரதான சிறப்பம்சமாக அதன் 24 மெகாபிக்சல் செல்பீ மூன்லைட் கேமரா திகழ்கிறது. இது எப் / 2.0 துளை, பேஸ் பியூட்டி 7.0, வீடியோ கால் பேஸ் பியூட்டி மோட், க்ரூப் செல்பே மற்றும் போர்ட்ரைட் மோட் ஆகிய அம்சங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. மறுகையில் பாஸ்ட் போகஸ் அம்சம், எப் / 2.0 துளை மற்றும் எல்இடி ப்ளாஷ் உடனான ஒரு 16 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு.!

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு.!

இந்த ஸ்மார்ட்போன் 2.0ஜிகாஹெர்ட்ஸ் உடனான ஒரு ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடியது.

3225எம்ஏஎச் பேட்டரி.!

3225எம்ஏஎச் பேட்டரி.!

விவோ வ்யை79 ஆனது ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட் அடிப்படையிலான நிறுவனத்தின் ஃபன்டச் ஓஎஸ் 3.2 கொண்டு இயங்கும் மற்றும் 3225எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. பேஸ் அக்சஸ் அம்சம் கொண்டுள்ள இந்த சாதனம் ஒரு கைரேகை சென்சாரையும் அதன் பின்புறத்தில் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

இது ஒரு அதிவேக ஒலி அனுபவமளிக்கும் ஹைஃபை ஏகே4376ஏ சிப்செட் கொண்டு வருகிறது. 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.2 மற்றும் இரட்டை சிம் ஆகிய இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ள இக்கருவி அளவீட்டில் 155.87 x 75.74 x 7.7 மிமீ மற்றும் 160 கிராம் எடையுடையது. இக்கருவியின் இந்திய வெளியீடு பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Vivo Y79 launched with 5.99-inch FullView display, 24-megapixel selfie camera. Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X