Home
Mobile

சத்தமின்றி அறிமுகமானது புது விவோ போன்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அசத்தலான அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் விவோ ஒய்78டி (Vivo Y78t) எனும் ஸ்மார்ட்போனை சத்தமின்றி அறிமுகம் செய்துள்ளது விவோ.

அதாவது இந்த விவோ விவோ ஒய்78டி ஸ்மார்ட்போன் ஆனது தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது இந்த விவோ ஒய்78டி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.

சத்தமின்றி அறிமுகமானது புது விவோ போன்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

6.64-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது விவோ ஒய்78டி ஸ்மார்ட்போன். பின்பு 1080 x 2388 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் (Snapdragon 6 Gen 1 chipset) வசதியைக் கொண்டு விவோ ஒய்78டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக வீடியோ எடிட்டிங், கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ ஒய்78டி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி பொக்கே லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256 மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி ஆகிய மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் விவோ ஒய்78டி ஸ்மார்ட்போன். இதுதவிர கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்78டி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் இந்த பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் விவோ ஒய்78டி போனில் சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) வருகிறது.

சத்தமின்றி அறிமுகமானது புது விவோ போன்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

ஆண்டராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு விவோ ஒய்78டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதுதவிர டூயல் சிம், 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.1,வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது விவோ ஒய்78டி ஸ்மார்ட்போன்.

விவோ ஒய்78டி ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு, வெள்ளை மற்றும் பச்சை போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனின் விலை 1,499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.17,000) ஆக உள்ளது. வரும் அக்டோபர் 22-ம் தேதி சீனாவில் விற்பனைக்கு வருகிறது விவோ ஒய்78டி ஸ்மார்ட்போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y78T launched with 50MP camera, 12GB RAM: check price, specifications, availability : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X