வாரி தூக்கும் பட்ஜெட்.. 12ஜிபி ரேம், 50MP கேமரா, 44W சார்ஜிங்.. அறிமுகமானது புது விவோ போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் சியோமி, ஒன்பிளஸ் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான 5ஜி போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது விவோ Y77t (vivo Y77t) எனும் புதிய போனை அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம். இந்த போன் சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் இந்த விவோ Y77t ஸ்மார்ட்போன் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 50எம்பி கேமரா, ஃபுல் எச்டி டிஸ்பிளே, பாஸ்ட் சார்ஜிங் வசதி எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது விவோ Y77t ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ Y77t அம்சங்கள் (vivo Y77t specifications): 6.64-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (Full HD+) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ போன் வெளிவந்துள்ளது. அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (240Hz touch sampling rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஆக்டோ-கோர் மீடியாடெக் 7020 6என்எம் பிராசஸர் (MediaTek Dimensity 7020 6nm processor) உடன் ஐஎம்ஜி பிஎக்ஸ்எம்-8-256 ஜிபியு ஆதரவு இதில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த வேகம் மற்றும் செயல்திறன் தரும். மேலும் OriginOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய விவோ Y77t போன் வெளிவந்துள்ளது.
விவோ Y77t ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த போனில் எல்இடி பிளாஷ் ஆதரவும் உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
8ஜிபி/12ஜிபி ரேம் மறறும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய விவோ Y77t ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
விவோ Y77t ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் (44W fast charging) வசதி உள்ளது. எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் கைரேகை ஸகேனர் ஆதரவுடன் இந்த விவோ Y77t ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஸ்எஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய விவோ Y77t போன். மேலும் கருப்பு, நீலம் மற்றும் தங்க நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் விவோ Y77t போனின் எடை 190 கிராம் ஆகும்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ Y77t போனின் விலை 1399 யுவான் (yuan) (இந்திய மதிப்பில் ரூ.15,950). மேலும் இதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் விலை 1599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.18,230). தற்போது இந்த போன் சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








