Home
Mobile

வா ராசா உனக்கு தான் வெயிட்டிங்..பவர்ஃபுல் ப்ராசஸர்.. அதுக்கு ஏற்ற 12GB ரேம்.. 44W பிளாஷ் சார்ஜிங்..என்ன மாடல்?

விவோ நிறுவனம் ஒப்போ நிறுவனத்திற்குப் போட்டியாக பாஸ்ட் சார்ஜிங் மற்றும் தரமான அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக மற்ற நிறுவனங்களிள் போன்களை விட விவோ நிறுவனத்தின் போன்கள் அட்டகாசமான வடிவமைப்புடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

இந்நிலையில் விவோ நிறுவனம் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது விவோ Y77t (Vivo Y77t) எனும் ஸ்மார்ட்போனை தான் விவோ நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய போன் முதலில் சீனாவில் அறிமுகமாகும் என்றும், அதன்பிறகு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

பவர்ஃபுல் ப்ராசஸர், 12GB ரேம் உடன் வரும் புது VIVO போன்!

அதேபோல் இந்த விவோ Y77t ஸ்மார்ட்போன் இந்தியாவில் விவோ Y78m (Vivo Y78m) என்ற பெயரில் கூட அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் கூகுள் பிளே கன்சோல் (Google Play Console) தளத்தில் கசிந்த இந்த விவோ Y77t ஸ்மார்ட்போனின்ன அம்சங்கள் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது இந்த விவோ Y77t ஸ்மார்ட்போன் ஆனது கேமிங் வசதிக்குத் தகுந்தபடி மீடியாடெக் டைமன்சிட்டி 7020 (MediaTek Dimensity 7020) பவர்ஃபுல் ப்ராசஸர் உடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த பவர்ஃபுல் ப்ராசஸர் சிறந்த வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

விவோ Y77t ஸ்மார்ட்போன் OriginOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன்.

குறிப்பாக இந்த விவோ Y77t ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த விவோ போன் அறிமுகமாகும்.

இந்த விவோ Y77t ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி மேக்ரோ என்கிற டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் இந்த அட்டகாசமான விவோ போன்.

பவர்ஃபுல் ப்ராசஸர், 12GB ரேம் உடன் வரும் புது VIVO போன்!

விவோ Y77t ஸ்மார்ட்போனில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். அதற்குத் தகுந்தபடி 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 44 வாட்ஸ் பிளாஷ் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

அதேபோல் இந்த விவோ Y77t ஸமார்ட்போன் ஆனது கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவகளுடன் இந்த விவோ Y77t ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். குறிப்பாக இந்த புதிய விவோ போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y77t will be launched soon with MediaTek Dimensity 7020 SoC, 12GB RAM : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X