ஒரே சார்ஜிங்கில் 25 நாள் யூஸ் பண்ணலாம்: Vivo அறிமுகம் செய்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்!

|

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Vivo, ஒய் சீரிஸ் தொடரில் புது ஸ்மார்ட்போனை தனது சொந்த நாட்டு சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அது Vivo Y77e 5G ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன் 60Hz ரெஃப்ரஷிங் ரேட், வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் டைமன்சிட்டி 810 சிப்செட் வசதியோடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

Vivo Y77e 5G சிறப்பம்சங்கள்

Vivo Y77e 5G சிறப்பம்சங்கள்

Vivo Y77e 5G சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது OriginOS அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12 மூலம் இயக்கப்படுகிறது.

2408 x 1080 பிக்சல்கள் தீர்மானத்துடன் 6.58 இன்ச் HD+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது.

90.61 சதவீத டிஸ்ப்ளே டூ பாடி விகிதம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவை இந்த டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

வாட்டர் டிராப் நாட்ச் ஆதரவோடு 8 எம்பி செல்பி கேமரா வசதி இதில் உள்ளது.

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

Vivo Y77e 5G ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 810 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

13 எம்பி பிரைமரி சென்சார்

13 எம்பி பிரைமரி சென்சார்

Vivo Y77e 5G ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா ஆதரவுகள் இருக்கிறது. இதில் டூயல் பின்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

Vivo Y77e 5G ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி சென்சார் மற்றும் 2 எம்பி செகண்டரி மேக்ரோ லென்ஸ் இருக்கிறது.

சூப்பர் HDR, ஸ்லோ-மோஷன், மல்டிபிளேயர் போர்ட்ரெய்ட், லைவ் போட்டோ, பனோரமா மற்றும் சூப்பர் நைட் மோட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.

Vivo Y77e 5G இணைப்பு ஆதரவுகள்

Vivo Y77e 5G இணைப்பு ஆதரவுகள்

Vivo Y77e 5G ஸ்மார்ட்போனின் இணைப்பு ஆதரவுகள் குறித்து பார்க்கையில், இதில் 4G LTE, Wi-Fi, டூயல் சிம் ஆதரவு, ப்ளூடூத் 5.1 மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவுகள் இருக்கிறது. புதிய விவோ ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், ஃபேஸ் அன்லாக் அம்சம் உள்ளது.

25 நாட்கள் காத்திருப்பு நேர ஆயுள்

25 நாட்கள் காத்திருப்பு நேர ஆயுள்

இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்வதற்கு 18W ஃப்ளாஷ் சார்ஜிங் ஆதரவு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 25 நாட்கள் காத்திருப்பு நேர ஆயுளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Vivo Y77e 5G விலை

Vivo Y77e 5G விலை

Vivo Y77e 5G ஸ்மார்ட்போனானது மூன்று வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது.

இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.20,000 ஆக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இது மிட்-ரேன்ஜ் வேரியண்ட் ஆகும். பிற இரண்டு வேரியண்ட்களான அடிப்படை மற்றும் அதிகபட்ச வேரியண்ட் விலை இன்னும் வெளியாகவில்லை.

இந்தியாவில் எப்போது அறிமுகமாகும்?

இந்தியாவில் எப்போது அறிமுகமாகும்?

இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனானது க்ரிஸ்டல் பவுடர், க்ரிஸ்டல் ப்ளாக் மற்றும் சம்மர் லிஸ்டனிங் என மூன்று வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது அறிமுகமாகும், எப்போது கிடைக்கும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo Y77e 5G Smartphone Launched with 5000mAh Battery, Dimensity 810 Chipset

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X