தரமான சிப்செட்: நீங்கள் எதிர்பார்த்த அம்சங்களுடன் Vivo Y77 5G அறிமுகம்: என்ன விலை?

|

ஒப்போ, மோட்டோ நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை விட விவோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் தரமான அம்சங்களுடன் வெளிவருவதால் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் இந்தியாவில் போலி ஆவணங்களை பயன்படுத்தியதாக விவோ நிறுவனம் சிக்கலில் சிக்கியுள்ளது.

விவோ Y77 5ஜி

விவோ Y77 5ஜி

இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம். அதாவது தரமான சிப்செட் வசதியுடன் விவோ Y77 5ஜி ஸ்மார்ட்போன் தான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது விவோ Y77 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம். இந்த விவோ Y77 5ஜி ஸ்மார்ட்போன் நீலம் மற்றும் பிங்க் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இனி வீடே தியேட்டர் தான்: 50% தள்ளுபடியுடன் Samsung, Realme, Oneplus, Sony ஸ்மார்ட்டிவிகள்!இனி வீடே தியேட்டர் தான்: 50% தள்ளுபடியுடன் Samsung, Realme, Oneplus, Sony ஸ்மார்ட்டிவிகள்!

விவோ Y77 5ஜி  டிஸ்பிளே

விவோ Y77 5ஜி டிஸ்பிளே

எப்போதும் டிஸ்பிளேவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது விவோ. அதன்படி இந்த புதிய விவோ Y77 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

மேலும் 1080 x 2408 பிக்சல், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த விவோ Y77 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

இன்னுமா சின்ன டிஸ்பிளே யூஸ் பண்ணுறீங்க? Lenovo Tab P11 Plus பாருங்க - பட்ஜெட்போன் விலையில் டேப்லெட் அறிமுகம்.!இன்னுமா சின்ன டிஸ்பிளே யூஸ் பண்ணுறீங்க? Lenovo Tab P11 Plus பாருங்க - பட்ஜெட்போன் விலையில் டேப்லெட் அறிமுகம்.!

வேற லெவல் சிப்செட்

வேற லெவல் சிப்செட்

இந்த விவோ Y77 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 930 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் கேமிங், எடிட்டிங் உள்ளிட்ட வசதிகளுக்கு தகுந்தபடி இந்த புதிய ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக புதிய விவோ Y77 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இது ஒரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம்.

Amazon Prime Day Sale 2022: ஆரம்ப தேதி இதான்! பிடிச்சதை எல்லாம் கார்டில் ஆட் பண்ண ரெடியா?Amazon Prime Day Sale 2022: ஆரம்ப தேதி இதான்! பிடிச்சதை எல்லாம் கார்டில் ஆட் பண்ண ரெடியா?

 கேமரா எப்படி?

கேமரா எப்படி?

இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் ட்ரிபிள் ரியர் கேமரா அல்லது குவாட் கேமராக்கள் தான் அதிகம் இடம்பெறுகிறது. ஆனால் இந்த விவோ Y77 5ஜி ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா வசதி தான் உள்ளது.

அதாவது இந்த போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற டூயல் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த போனின் கேமரா மட்டும் அவ்ளோ சூப்பரா ஒன்றும் இல்லை என்றே கூறலாம்.

Samsung: ஒரு கல்லுல 2 மாங்கா.. வரும் ஜூலை 14-ஆம் தேதி பட்ஜெட் கிங் சாம்சங்கின் சிறப்பான சம்பவம்.!Samsung: ஒரு கல்லுல 2 மாங்கா.. வரும் ஜூலை 14-ஆம் தேதி பட்ஜெட் கிங் சாம்சங்கின் சிறப்பான சம்பவம்.!

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் கைரேகை ஸ்கேனர் மற்றும் பல சென்சார் வசதிகளுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

18 ஜிபி ரேம், பிரத்யேக டிஸ்ப்ளே மற்றும் கூலிங் சிஸ்டம் உடன் Asus ROG Phone 6, 6 Pro: தலைசுத்த வைக்கும் அம்சம்!18 ஜிபி ரேம், பிரத்யேக டிஸ்ப்ளே மற்றும் கூலிங் சிஸ்டம் உடன் Asus ROG Phone 6, 6 Pro: தலைசுத்த வைக்கும் அம்சம்!

 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது

பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது

விவோ Y77 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் டூயல்-செல் பேட்டரி வசதி உள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. எனவே இந்த போனை விரைவில் சார்ஜ் செய்ய முடியும்.

எச்சரிக்கை: இலவச Visa உடன் வெளிநாட்டில் வேலை, மின் கட்டண பாக்கி- மோசடி கும்பலின் நூதன முறை!எச்சரிக்கை: இலவச Visa உடன் வெளிநாட்டில் வேலை, மின் கட்டண பாக்கி- மோசடி கும்பலின் நூதன முறை!

 என்ன விலை?

என்ன விலை?

5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் விவோ Y77 5ஜி ஸ்மார்ட்போனின் விலை CNY 1,999 (இந்திய மதிப்பில் ரூ.23,600) ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Y77 5G with 120Hz OLED display Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X