உங்க பட்ஜெட்டிற்கு ஏத்த போன் இது தான்.. விரைவில் வரவிருக்கும் Vivo Y77 5G போன்!

|

புதிதாக வரும் ஸ்மார்ட்போன்களை எல்லாம் பார்க்கும் போது வாங்க வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது, ஆனால், அந்த பட்ஜெட் தான், பட்ஜெட் மட்டும் தான் உதைக்கிறது என்று புலம்புபவர்களில் நீங்களும் ஒருவரா? அப்போ, உங்கள் கவலையைச் சரி செய்வதற்காகவே விவோ நிறுவனம் இப்போது ஒரு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய சாதனம் கட்டாயம் உங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்பதில் சந்தேகமில்லை.

வரவிருக்கும் புதிய Vivo Y77 5G ஸ்மார்ட்போன்

வரவிருக்கும் புதிய Vivo Y77 5G ஸ்மார்ட்போன்

விவோ அறிமுகம் செய்யவிருக்கும் புதிய ஸ்மார்ட்போனின் மாடல் பெயர் Vivo Y77 5G ஆகும். இந்த புதிய டிவைஸின் அதிகாரப்பூர்வ ரெண்டர்கள், சிறப்பம்ச தகவல்கள் மற்றும் விலை விவரங்கள் இப்போது இந்த சாதனத்தின் அறிமுகத்திற்கு முன்னதாக கசிந்துள்ளது. சமீபத்தில் வெளியான தகவலின் படி, வரும் ஜூலை 7 ஆம் தேதி விவோ நிறுவனம் மலேசியாவில் அதன் அதிகாரப்பூர்வ தளம் வழியாக இந்த டிவைஸை அறிமுகப்படுத்தப்படும் என்று சீன நிறுவனம் டிவிட்டரில் அறிவித்துள்ளது.

பட்ஜெட் விலையில் இப்படி ஒரு டிவைஸா?

பட்ஜெட் விலையில் இப்படி ஒரு டிவைஸா?

வரவிருக்கும் Vivo Y77 5G ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 810 சிப்செட் உடன் ஆண்ட்ராய்டு 12 இல் இயங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.58' இன்ச் முழு எச்டி+ கொண்ட வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவை கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படுகிறது என்றாலும் கூட, இதன் அம்சங்கள் போதுமான அளவிற்குச் சிறப்பாகவே உள்ளது. இந்த டிவைஸ் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.

ஃபோல்டபில் போன் வாங்க ஆசையா? அப்போ உங்கள் கைல ரூ. 3,042 இருந்தா போதும்! Samsung-ன் புது ஆஃபர்!ஃபோல்டபில் போன் வாங்க ஆசையா? அப்போ உங்கள் கைல ரூ. 3,042 இருந்தா போதும்! Samsung-ன் புது ஆஃபர்!

Vivo Y77 5G ஸ்மார்ட்போன் என்ன விலையில் வெளிவரும்?

Vivo Y77 5G ஸ்மார்ட்போன் என்ன விலையில் வெளிவரும்?

Vivo Y77 5G ஜூலை 7 ஆம் தேதி அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு நிகழ்வின் மூலம் அறிமுகம் செய்யப்படும் என்பதை நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆனால், அதற்கு முன்னதாக ரூட்மை கேலக்ஸி வழியாக இதன் சிறப்பம்சம் மற்றும் ரெண்டர் தகவல்கள் கசிந்துள்ளது. Vivo நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விலை CNY 1,299 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 15,000 எனக் கூறப்படுகிறது. Vivo Y77 5G போன் கிலோவிங் கேலக்ஸி மற்றும் ஸ்டர்லைட் பிளாக் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் வரும்.

புது போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. Asus ROG Phone 6 நாளை வருது!புது போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. Asus ROG Phone 6 நாளை வருது!

Vivo Y77 5G சிறப்பம்சங்கள்

Vivo Y77 5G சிறப்பம்சங்கள்

Vivo Y77 5G ஸ்மார்ட்போன் 60Hz ரெபிரெஷ்ஷிங் ரேட் உடன் 6.58' இன்ச் அளவு கொண்ட முழு-HD+ வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கிலிட்டரிங் ஏஜி மேட் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. Vivo வழங்கும் ஸ்மார்ட்போன் Dimensity 810 5G சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 12 இல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் இயங்கும் என்றும், இதன் எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் 1TB வரை செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

லேப்டாபை கூட சார்ஜ் செய்யும் 50,000mAh பவர் பேங்க் டிவைஸா? இது என்ன விலை தெரியுமா?

5,000mAh பேட்டரி

5,000mAh பேட்டரி

இந்த Vivo Y77 5G டிவைஸ் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவுடன் டூயல் பேக் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக இதில் 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த Vivo Y77 5G ஆனது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போன் டிவைஸை நீங்கள் வாங்க விரும்பினால் இது உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ்.

Best Mobiles in India

English summary
Vivo Y77 5G Renders Specifications Price Reportedly Leaked Ahead of July 7 Launch

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X