50எம்பி ரியர் கேமரா, 44W ஃபிளாஷ் சார்ஜ் உடன் விவோ Y76 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
விவோ நிறுவனம் மலேசியாவில் புதிய விவோ Y76 5G ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது விவோ Y76 5G ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ Y76 5G
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட விவோ Y76 5G ஸ்மார்ட்போனின் விலை MYR 1,299 (இந்தியமதிப்பில் ரூ.23,000) ஆக உள்ளது. குறிப்பாக காஸ்மிக் அரோரா மற்றும் மிட்நைட் ஸ்பேஸ் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன்
மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ Y76 5G ஸ்மார்ட்போனில் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 1,080x2,408 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் 460 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

விவோ Y76 5G ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது.

புதிய விவோ Y76 5G ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. பின்பு FunTouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் சிறந்த கேமிங் அனுபவத்தை கொடுக்கும் விவோ Y76 5G மாடல்.

விவோ Y76 5G ஸ்மார்ட்போனில் 4100 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 44W ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனத்தை விரைவில் சார்ஜ் செய்ய முடியும். பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ Y76 5G ஸ்மார்ட்போனில் புளூடூத் வி5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ,யுஎஸ்பி ஒடிஜி, டூயல் சிம் ஆதரவு, கைரேகை சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், இ-காம்பஸ் மற்றும் கைரோஸ்கோப் சென்சார் என பல சிறப்பு அம்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த விவோ Y54s ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போதுபார்ப்போம்.

விவோ Y54s
விவோ Y54s ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 1,600×720 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த சாதனத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விவோ Y54s ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ 700 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் OriginOS 1.0
சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது. விவோ Y54s ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள்பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்தஅசத்தலான சாதனம்.

விவோ Y54s ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,கைரேகை சென்சார், ஃபேஸ் ஐடி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. புளூடூத் வி5.1, 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஜிபிஎஸ்,மைக்ரோ-யுஎஸ்பி போர்ட், ஒடிஜி, வைஃபை உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ Y54s.


Click it and Unblock the Notifications