விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் விவோ Y76 5G ஸ்மார்ட்போன் மாடல்.!
விவோ நிறுவனம் புதிய விவோ Y76 5G மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக விவோ நிறுவனம் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அதாவது விரைவில் 5ஜி சேவை இந்தியாவில் அறிமுகம்
செய்யப்படும் என்பதால் பல நிறுவனங்கள் தொடர்ந்து பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.

குறிப்பாக விரைவில் வெளிவரும் விவோ Y76 5G ஸ்மார்ட்போன் மாடல் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் மாடல் எண் V2124 என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த விவோ Y76 5G ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ Y76 5G மாடல் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,408 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ Y76 5G ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 810 SoC சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ Y76 5G ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என இரண்டு கேமரா பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். இதுதவிர பல கேமரா அம்சங்கள், எல்இடி பிளாஷ் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

விவோY76 5G ஸ்மார்ட்போனில் 4100 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,கைரேகை ஸ்கேனர் மற்றும் பல சென்சார் வசதிகளுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ Y76 5G ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்ப ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைஃபை, புளூடூத் 5.1, என்எப்சி, மற்றும் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய விவோ Y76 5G ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது
என்றுதான் கூறவேண்டும்.


Click it and Unblock the Notifications