Home
Mobile

50எம்பி ரியர் கேமராவுடன் விவோ Y74s ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விவரங்கள்.!

மிகவும் அதிகம் எதிர்பார்த்த விவோ Y74s ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதி கொண்ட விவோ Y74s ஸ்மார்ட்போனின் விலை CNY 1,799 (இந்திய மதிப்பில் ரூ.21,000)ஆக உள்ளது. குறிப்பாக இந்த சாதனம் நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ Y74s ஸ்மார்ட்போன்

விவோ Y74s ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 1,080x2,408 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ Y74s ஸ்மார்ட்போன் மாடல்.

பயன்படுத்துவதற்கு மி

விவோ Y74s ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் மிக அருமையாக பயன்படும். அதேபோல் இந்த சாதனம் OriginOS 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

உதவியுடன் துல்லியமான

புதிய விவோ Y74s ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகண்டரி சென்சார் என மொத்தம் இரண்டுகேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவைக்கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த சாதனத்தின் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும்புகைப்படங்களை எடுக்க முடியும்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி

இந்த புதிய விவோ Y74s 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 5000 எம்ஏஎச் பேட்டரி

விவோ Y74s ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 44 வாட் பிளாஷ் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். எனவே இதன் உதவியுடன் மிகவேகமாக சார்ஜ் செய்ய முடியும். பின்பு இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதேபோல் இந்நிறுவனம் விரைவில் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன.

டைப்-சி, 3.5எம்எம் ஆ

புதிய விவோ Y74s ஸ்மார்ட்போனில் புளூடூத் வி5.1,5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின்வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Vivo Y74s With Dual Rear Cameras Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X