சிம்பிளா, க்யூட்டா அறிமுகமான Vivo ஸ்மார்ட்போன்.. நியாயமான விலை தரமான அம்சம்!

|

விவோ நிறுவனம் Vivo Y73t ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. Vivo Y73t ஸ்மார்ட்போனானது முழு HD+ டிஸ்ப்ளேவுடன் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது டைமன்சிட்டி 700 எஸ்ஓசி, டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது.

சிறந்த டிஸ்ப்ளே, பெரிய பேட்டரி

சிறந்த டிஸ்ப்ளே, பெரிய பேட்டரி

Vivo நிறுவனம் ஒய் தொடரின் கீழ் இந்த புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. Vivo Y73t ஸ்மார்ட்போனானது டைமன்சிட்டி 700 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் மிகப் பெரிய பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனில் 6000mAh பேட்டரி இருக்கிறது.

இந்த பேட்டரியை சார்ஜ் செய் 44 வாட்ஸ் ஃப்ளாஷ்சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

Vivo Y73t விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Vivo Y73t விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Vivo Y73t விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது தற்போது சீனாவில் வெளியாகி இருக்கிறது.

Autumn, Fog Blue மற்றும் Mirror Black ஆகிய வண்ண விருப்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு வேரியண்ட்களில் விற்பனை..

இரண்டு வேரியண்ட்களில் விற்பனை..

இதன் விலை குறித்து பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை CNY 1,399 (தோராயமாக ரூ.16,000) எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,599 (தோராயமாக ரூ.18,500) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அக்டோபர் 10 முதல் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vivo Y73t சிறப்பம்சங்கள்

Vivo Y73t சிறப்பம்சங்கள்

Vivo Y73t சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 1080 x 2408 பிக்சல்கள் தீர்மானம், 60Hz ரெஃப்ரஷிங் ரேட், 180Hz தொடு மாதிரி வீதத்துடன் கூடிய 6.58 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப் மூலம் இயக்கப்பட்டுள்ளது. டூயல் மோட் 5ஜி நெட்வொர்க் ஆதரவு இதில் உள்ளது.

50 எம்பி பிரதான கேமரா

50 எம்பி பிரதான கேமரா

Vivo Y73t ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 50 எம்பி பிரதான கேமரா உட்பட டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இரண்டாம் நிலை கேமராவாக 2 எம்பி மேக்ரோ கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் செல்பி ஆதரவுக்கு என 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்துக்கு என் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு இதில் உள்ளது.

6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு..

6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு..

Vivo Y75s ஸ்மார்ட்போனானது ஆர்ஜின் ஓஎஸ் ஓசன் அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12 மூலம் இயங்குகிறது. இதில் பெரிய அளவிலான 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. 5ஜி ஆதரவு, ப்ளூடூத் 5.1, யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகள் இதில் இருக்கிறது.

சமீபத்தில் அறிமுகமான Vivo X Fold+

சமீபத்தில் அறிமுகமான Vivo X Fold+

விவோ நிறுவனம் Vivo X Fold+ எனும் ஸ்மார்ட்போனை செப்டம்பர் 27 ஆம் தேதி அறிமுகம் செய்தது. பக்கா ப்ரீமியம் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

விவோ எக்ஸ் போல்ட் பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vivo X Fold+ விலை..

Vivo X Fold+ விலை..

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Vivo X Fold+ போனின் விலை CNY 9,999 (இந்திய மதிப்பில் ரூ.1,15,000) எனவும் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Vivo X Fold+ போனின் விலை CNY 10,999 (இந்திய மதிப்பில் ரூ.1,25,000) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Y73t launched at Budget Price with Dimensity SoC, Dual Rear Cameras

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X