அட்டகாச அம்சங்களோடு விவோ ஒய்73 எஸ்: இதோ விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மீடியாடெக் 720 எஸ்ஓசி செயலியுடன் இயக்கப்படும் விவோ ஒய் 73 எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மூன்று பின்புற கேமரா அமைப்பு, 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட அட்டகாச அம்சங்களை கொண்டுள்ளது.

விவோ ஒய் 73 எஸ் ஸ்மார்ட்போன்
விவோ நிறுவனம் சமீபத்திய 5 ஜி ஸ்மார்ட்போனாக விவோ ஒய் 73 எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடல் ஸ்மார்ட்போனானது டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த அம்சம் என்றால் அது மீடியாடெக் 720 எஸ்ஓசி செயலியுடன் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதோடு ஹூவாய் என்ஜாய் 20, என்ஜாய் 20 ப்ளஸ், ஒப்போ ரெனால்ட் 4 எஸ்இ மற்றும் ரியல்மி வி3 உள்ளிட்ட மாடல்களில் பொருத்தப்பட்டுள்ளது.

இரண்டு வண்ண விருப்பங்கள்
இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. அதோடு விவோ ஒய் 73 எஸ் ஸ்மார்ட்போனில் அமோலெட் டிஸ்ப்ளே, இன்டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

விவோ ஒய் 73 எஸ்: விலை மற்றும் அம்சங்கள்
விவோ ஒய் 73 எஸ் ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு என்ற ஒரே வேரியண்டில் கிடைக்கிறது. இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.21,700 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அக்டோபர் 16 முதல் விற்பனைக்கு வருகிறது இதற்கான முன்பதிவு இப்போதே சீனாவில் தொடங்கிவிட்டது.

விவோ ஒய் 73 எஸ்: அம்சங்கள்
விவோ ஒய் 73 எஸ் ஆண்ட்ராய்டு 10 ஆதரவு, இரட்டை சிம் நானோ வடிவமைப்போடு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் முழு எச்டி+ AMOLED டிஸ்ப்ளே, 90.1% ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் மற்றும் எச்டிஆர் 10 ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் கொண்ட ஆக்டாகோர் மீடியாடெக் 720 SoC செயலி மூலம் இயக்கப்படுகிறது.

விவோ ஒய் 73 எஸ்: கேமரா அம்சங்கள்
விவோ ஒய் 73 எஸ் ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இது 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார் கொண்டுள்ளது. விவோ ஒய் 73 எஸ் ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

128 ஜிபி சேமிப்பு வசதி
விவோ ஒய் 73 எஸ் 128 ஜிபி சேமிப்புடன் வருகிறது. இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில் 5 ஜி ஆதரவு, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் பாதுகாப்பு அம்சத்திற்கு இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. விவோ ஒய் 73 எஸ் ஸ்மார்ட்போனானது 4,100mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது, இது 18W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.


Click it and Unblock the Notifications