உயர்ரக அம்சம், கண்கவர் வடிவமைப்பு: விவோ ஒய் 72 விலை இதுதான்!
விவோ இந்தாண்டின் தொடக்கத்தில் இடைநிலை ஸ்மார்ட்போன் பிரிவில் சிறந்த ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. விவோ தனது பட்டியலில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. விவோ ஒய்72 5ஜி என்ற புதிய ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவு கொண்ட மாடலாகும். 5ஜி இணைப்புடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரதான கேமரா, முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது.

விவோ ஒய்72 5ஜி ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 6.58 இன்ச் ஐபிஎல் எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே 1080x2400 பிக்சல் தீர்மானம் கொண்ட முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. என்டிஎஸ்சி வண்ண வரம்பு ஆதரவோடு கூடிய பேனலை கொண்டிருக்கிறது.

பின்புறத்தில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு
விவோ ஒய்72 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 64எம்பி முதன்மை கேமராவை கொண்டிருக்கிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார் கேமராக்களை கொண்டிருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16எம்பி செல்பி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. டிஸ்ப்ளே உச்சிப்பகுதியில் யு-வடிவ கேமரா அமைப்பு இருக்கிறது. இந்த கேமராக்கள் ஆட்டோஃபோகஸ் வசதியோடு வருகிறது. சூப்பர் நைட் பயன்முறையுடன் இந்த கேமரா வருகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
விவோ ஸ்மார்ட்போனில் மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது. மேலும் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில், ஆடியோ ஜாக், யூஎஸ்பி டைப்சி போர்ட், வைஃபை, ப்ளூடூத் மற்றும் இரட்டை சிம் ஆதரவுகளை கொண்டிருக்கிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் வசதி இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு மற்றும் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இருக்கிறது.

8ஜிபி ரேம், 128ஜிபி உள்சேமிப்பு
விவோ ஒய்72 5ஜி சாதனத்தின் விலை மற்றும் விவரங்கள் குறித்து பார்க்கையில், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு வசதி கொண்ட வேரியண்ட் விலை குறித்து பார்க்கையில் இதன் இந்திய மதிப்புப்படி ரூ.23,376 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 25 முதல் தாய்லாந்தில் ஆர்டருக்கு கிடைக்கும். ஸ்மார்ட்போன் வண்ண விருப்பங்கள் குறித்து பார்க்கையில், இது ட்ரீம் க்ளோ மற்றும் கிராஃபைட் பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications