விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் விவோ Y72 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

விவோ நிறுவனம் தனது புதிய விவோ Y72 5G ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் 5ஜி ஆதரவு மற்றும் தரமான சிப்செட் வசதியுடன் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. இப்போது விவோ Y72 5G ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே

6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே

விவோ Y72 5G ஸ்மார்ட்போன் மாடல் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய விவோ Y72 5G ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட்

ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட்

விவோ Y72 5G ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் FuntouchOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக வேண்டும்.

SBI பயனர்களே! இந்த ஆவணங்களை உடனே அப்டேட் செய்யவும் அல்லது வங்கி சேவை ரத்து.SBI பயனர்களே! இந்த ஆவணங்களை உடனே அப்டேட் செய்யவும் அல்லது வங்கி சேவை ரத்து.

 48எம்பி பிரைமரி லென்ஸ்

48எம்பி பிரைமரி லென்ஸ்

விவோ Y72 5G ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சோதனை செஞ்சாச்சு: 1000 எம்பிபிஎஸ் வேகத்தில் 5ஜி இன்டர்நெட்- கெத்து காட்டிய ஏர்டெல்!சோதனை செஞ்சாச்சு: 1000 எம்பிபிஎஸ் வேகத்தில் 5ஜி இன்டர்நெட்- கெத்து காட்டிய ஏர்டெல்!

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி

விவோ Y72 5G ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

யாரு சாமி இவன்- பட்டையை கிளப்பும் 7 வயது சிறுவன்: ஒரே வீடியோ 148K பார்வையாளர்கள்!யாரு சாமி இவன்- பட்டையை கிளப்பும் 7 வயது சிறுவன்: ஒரே வீடியோ 148K பார்வையாளர்கள்!

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ Y72 5G மாடல்.

'வெள்ளி-செவ்வாய்-சந்திரன்' மூன்றும் ஒரே வானில் நெருங்கும் காட்சி.. வெறும் கண்களால் இதை பார்க்கலாமா?'வெள்ளி-செவ்வாய்-சந்திரன்' மூன்றும் ஒரே வானில் நெருங்கும் காட்சி.. வெறும் கண்களால் இதை பார்க்கலாமா?

வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/

5ஜி, 4ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த புதிய விவோ Y72 5G ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo Y72 5G May Launching Soon in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X