விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் விவோ Y72 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
விவோ நிறுவனம் தனது புதிய விவோ Y72 5G ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் 5ஜி ஆதரவு மற்றும் தரமான சிப்செட் வசதியுடன் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. இப்போது விவோ Y72 5G ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே
விவோ Y72 5G ஸ்மார்ட்போன் மாடல் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய விவோ Y72 5G ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட்
விவோ Y72 5G ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் FuntouchOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக வேண்டும்.

48எம்பி பிரைமரி லென்ஸ்
விவோ Y72 5G ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ Y72 5G ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

5000 எம்ஏஎச் பேட்டரி
இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ Y72 5G மாடல்.

5ஜி, 4ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த புதிய விவோ Y72 5G ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications