8ஜிபி ரேம், 64 எம்பி கேமரா, ஆண்ட்ராய்டு 11 என எல்லாமே வேற லெவல்: விவோ ஒய்71டி அறிமுகம்- விலை இதோ!

|

விவோ ஒய்71 டி ஸ்மார்ட்போனானது அமோலெட் டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமன்சிட்டி 810 எஸ்ஓசி உடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஆதரவு, 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 4000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு உயர்ரக அம்சங்களோடு வருகிறது. இந்த சாதனத்தின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கலாம்.

விவோ ஒய்71 டி ஸ்மார்ட்போன்

விவோ ஒய்71 டி ஸ்மார்ட்போன்

விவோ ஒய்71 டி ஸ்மார்ட்போனானது அமோலெட் டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமன்சிட்டி 810 எஸ்ஓசி உடன் அறிமுகம் செய்யப்பட்டது. விவோ ஒய்71டி ஸ்மார்ட்போனானது இந்திய மதிப்புப்படி ரூ.21,000 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கல் குறித்து பார்க்கலாம். விவோ ஒய்71டி நிறுவனத்தின் ஒய் தொடரின் சமீபத்திய மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

20:9 அமோலெட் டிஸ்ப்ளே

20:9 அமோலெட் டிஸ்ப்ளே

புதிய விவோ போன் ஆனது 20:9 அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. விவோ ஒய்71 டி இரட்டை பின்புற கேமராக்கள் அமைப்புகளுடன் வருகிறது. 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 810 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் மற்றும் இரண்டு தனித்துவமான வண்ண விருப்பங்களுடன் வருகிறது. விவோ ஒய்71டி முக்கிய சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இது 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா உடன் வருகிறது. ஐந்து அடுக்கு திரவ குளிரூட்டும் அமைப்புகளுடன் வருகிறது.

விவோ ஒய்71டி விலை, அம்ங்கள்

விவோ ஒய்71டி விலை, அம்ங்கள்

விவோ ஒய்71டி விலை, அம்ங்கள் குறித்து பார்க்கையில், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த வேரியண்ட்டின் விலை ரூ.21000 ஆக இருக்கிறது. 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இதன் இந்திய மதிப்பு விலை ரூ.23,400 ஆக இருக்கிறது. இது மிராஜ் மற்றும் மிட்நைட் ப்ளூ வண்ண விருப்பத்தோடு வருகிறது. இந்த சாதனம் தற்போதே சீனாவில் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு கிடைக்கிறது. இந்த சாதனத்தின் விற்பனை நவம்பர் 1 அன்று திட்டமிடப்பட்டிருக்கிறது. விவோ ஒய்71டி குறித்த விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

விவோ ஒய்71டி சிறப்பம்சங்கள்

விவோ ஒய்71டி சிறப்பம்சங்கள்

விவோ ஒய்7டி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இரட்டை சிம் (நானோ) ஆதரவு ஆண்ட்ராய்டு 11 ஒரிஜினல் 1.0 உடன் இயங்குகிறது. 6.44 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே (1,080x2,400 பிக்சல்கள்) தீர்மானத்துடன் வருகிறது. ஹூட்டின் கீழ், விவோ ஒய்71டி ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 810 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் உள்ளமைக்கப்பட்ட ரேம் வசதியானது 4ஜிபி வரையிலான மெய்நிகர் விரிவாகத்தைக் கொண்டுள்ளது.

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

புகைப்படங்கல் மற்றும் வீடியோக்களை பொறுத்தவரையில் விவோ ஒய்71டி இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் உடன் வருகிறது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதியோடு வருகிறது.

256 ஜிபி உள்சேமிப்பு வசதி

256 ஜிபி உள்சேமிப்பு வசதி

விவோ ஒய்71டி ஸ்மார்ட்போனானது 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரையில் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் வி5.1, யூஎஸ்பி டைப்-சி போர்ட்டில் இயங்குகிறது. போர்டில் உள்ள சென்சார்களில் ஆக்ஸிலரோமீட்டர், சுற்றுப்புற ஒளி, கைரோஸ்கோம் உள்ளிட்டவைகள் அடங்கும். பாதுகாப்பு அம்சத்துக்கு இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதியை கொண்டிருக்கிறது. விவோ ஸ்மார்ட்போனானது 4000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 4ஜி நெட்வொர்க்கில் 14.5 மணிநேர பேச்சு நேரத்தை வழங்குகிறது. இந்த பேட்டரி ஆனது 44 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது 166.3 கிராம் எடையை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Y71T Launched With 8GB RAM, 64MP Primary Camera, Android 11 and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X