இந்தியா: ஃபேஸ் அன்லாக் வசதியுடன் விவோ வ்யை71 அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 5மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
விவோ நிறுவனம் தற்சமயம் பட்ஜெட் விலையில் அசத்தலான விவோ வ்யை71 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஃபேஸ் அன்லாக் வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ வ்யை71 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720x1440 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளத.
குறிப்பாக இந்த வ்யை71 ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 ஆக்டோ-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 5மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த விவோ ஸ்மார்ட்போன்களில் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
விவோ வ்யை71 ஸ்மார்ட்போனின் சேமிப்பு பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ வ்யை71 ஸ்மார்ட்போனில் 3360எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வீடியோ கால் அழைப்புகள், மற்றும் ஆப் வசதிகளுக்கு மிகவும் அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் சார்பாகதகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவோ வ்யை71 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.10,990-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த ஆண்டு பல ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது விவோ நிறுவனம், மேலும் இதற்குமுன்பு வந்த விவோ வி9 ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
தற்சமயம் ரூ.22,900/- என்கிற விலை நிர்ணயத்தை கொண்டுள்ள விவோ வி9 ஸ்மார்ட்போனின் அறிமுகம் விற்பனையில் சில சுவாரசியமான தள்ளுபடிகளும் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications