விவோ ஒய் 70 மற்றும் விவோ ஒய் 11 எஸ் மறுபெயரிட்ட பதிப்பாக அறிமுகம்: விலை மற்றும் விவரங்கள்!

|

விவோ ஒய் 70 மற்றும் விவோ ஒய் 11 எஸ் ஸ்மார்ட்போன்கள் மறுபெயரிட்ட பதிப்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

விவோ ஒய் 70, விவோ ஒய் 11 எஸ்

விவோ ஒய் 70, விவோ ஒய் 11 எஸ்

விவோ ஒய் 70, விவோ ஒய் 11 எஸ் ஸ்மார்ட்போன்கள் ஐரோப்பாவில் விவோ நிறுவனம் மலிவு விலை பட்டியலில் அறிமுகம் செய்துள்ளன. விவோ எக்ஸ் 51 5ஜி, விவோ ஒய் 20 எஸ், விவோ ஒய் 70 மற்றும் விவோ ஒய் 11 எஸ் ஆகிய நான்கு ஸ்மார்ட்போன்கள் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் X51 5G மற்றும் Y20 எஸ் ஸ்மார்ட்போன்கள் விவோ எக்ஸ் 50 ப்ரோ மற்றும் விவோ ஒய் 20 ஆகியவற்றின் மறுபெயரிடப்பட்ட பதிப்புகளாகும்.

விவோ ஒய் 70, விவோ ஒய் 11 எஸ் விலை

விவோ ஒய் 70, விவோ ஒய் 11 எஸ் விலை

விவோ ஒய் 70 ஸ்மார்ட்போன் இங்கிலாந்தில் GBP 279 (தோராயமாக ரூ.26,900) ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 29 முதல் வாங்குவதற்கு கிடைக்கும் என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. விவோ ஒய் 11 எஸ் ஸ்மார்ட்போன் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இரண்டு ஸ்மார்ட்போன்களும் நிறுவனத்தின் இங்கிலாந்து இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

விவோ ஒய் 70 அம்சங்கள்

விவோ ஒய் 70 அம்சங்கள்

விவோவின் இங்கிலாந்து இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அம்சங்களின்படி, ஒய் 70 எஸ் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ வி 20 எஸ்இ இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கிறது. இது 6.44 இன்ச் முழு எச்டி+ (2,400x1,080 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. விவோ ஒய் 70 குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 SoC செயலி மூலம் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்புடன் இயக்கப்படுகிறது.

விவோ ஒய் 70 கேமரா

விவோ ஒய் 70 கேமரா

விவோ ஒய் 70 மூன்று பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இது 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா அடங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

கெத்து காட்டும் Vi Double data ஆபர்: அதே விலையில் இரட்டிப்பு டேட்டா!

4,100 எம்ஏஎச் பேட்டரி

4,100 எம்ஏஎச் பேட்டரி

விவோ ஒய் 70 4,100 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது, இது 33W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. விவோ ஒய் 70 கிராவிட்டி பிளாக் மற்றும் ஆக்ஸிஜன் ப்ளூ என இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது. இணைப்பு விருப்பங்களாக வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜி.பி.எஸ், ஓ.டி.ஜி, என்.எஃப்.சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும்.

விவோ ஒய் 11 எஸ்: அம்சங்கள்

விவோ ஒய் 11 எஸ்: அம்சங்கள்

விவோ ஒய் 11 எஸ் இங்கிலாந்து இணையதளத்தில் உள்ள பட்டியலின்படி, 6.51 இன்ச் எச்டி + (1,600x720 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 SoC செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது 5,000 mAh பேட்டரி 10W வேகமான சார்ஜிங் மூலம் ஆதரிக்கிறது.

விவோ ஒய் 11 எஸ்: கேமரா அம்சங்கள்

விவோ ஒய் 11 எஸ்: கேமரா அம்சங்கள்

விவோ ஒய் 11 எஸ் இரட்டை பின்புற கேமராக்களுடன் வருகிறது. இதில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போனில் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. விவோ ஒய் 20 எஸ் விலை GBp 149 (தோராயமாக ரூ.14,400) ஆக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

விவோ ஒய் 70 மற்றும் விவோ ஒய் 11 எஸ் ஸ்மார்ட்போன்கள் மறுபெயரிட்ட பதிப்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo Y70 and Vivo Y11s Launched as the rebraded version: Here the price and details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X