Home
Mobile

சத்தமின்றி அறிமுகமானது புதிய Vivo 5ஜி போன்.. 6500mAh பேட்டரி.. IP65 ரேட்டிங்.. எந்த மாடல்? என்ன விலை?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ ஒய்6இ 5ஜி போனை தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். இப்போது விவோ ஒய்6இ 5ஜி (Vivo Y6e 5G) போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ ஒய்6இ 5ஜி அம்சங்கள் (Vivo Y6e 5G Specifications): 6.74-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் விவோ ஒய்6இ 5ஜி போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720×1,600 பிக்கசல்ஸ், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 16.7 மில்லியன் கலர்ஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு பல அம்சங்கள் உள்ளன.

சத்தமின்றி அறிமுகமானது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை?

சக்திவாய்ந்த 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (4nm octa core Snapdragon 4 Gen 2) சிப்செட் உடன் விவோ ஒய்6இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இதில் உள்ளது.

13எம்பி ரியர் கேமரா உடன் விவோ ஒய்6இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6ஜிபி ரேம் மற்றும் 256 மெமரி உடன் விவோ ஒய்6இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வசதியுடன் விவோ ஒய்6இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. கிராவிட்டி சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார், ப்ராக்சிமிட்டி சென்சார், இ-காம்பஸ் மற்றும் IR பிளாஸ்டர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான சென்சார் வசதிகள் இந்த போனில் உள்ளன.

IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியுடன் விவோ ஒய்6இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஸ், கலிலியோ (Galileo), குளோனாஸ் (Glonass), பெய்டூ (BeiDou), கியூஇசட்எஸ்எஸ் (QZSS) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

சத்தமின்றி அறிமுகமானது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை?

6500mAh பேட்டரி உடன் விவோ ஒய்6இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W சார்ஜிங் வசதியும் உள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்6இ 5ஜி போனின் விலை CNY 1,599 (இந்திய மதிப்பில் ரூ.22,000)-ஆக உள்ளது. குறிப்பாக ஃப்ளோயிங் கிளவுட்ஸ் ஒயிட், சன்செட் ப்ளூ மற்றும் ட்வைலைட் பிளாக் நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
vivo y6e 5g with 6500mah battery launched in china: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X