மிட்ரேன்ஜ் பட்ஜெட்டில் 16 எம்பி செல்பீ கேமராவுடன் புதிய விவோ ஸ்மார்ட்போன்.!

|

நேற்று (வெள்ளிக்கிழமை) விவோ நிறுவனம் அதன் "வ்யை (Y) வரிசையில் புதியதொரு கருவியை அறிமுகம் செய்தது. வ்யை69 என்ற பெயர்சூட்டப்பட்டுள்ள அந்த ஸ்மார்ட்போன் ரூ.14,990/- என்ற மிட்-ரேன்ஜ் பட்ஜெட் விலை கொண்டுள்ளது.

மிட்ரேன்ஜ் பட்ஜெட்; 16 எம்பி செல்பீ கேமரா - புதிய விவோ ஸ்மார்ட்போன்.!

வழக்கம்போல விவோ நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போனும் ஒரு கேமரா அம்சங்கள் நிறைந்த கருவியாக திகழ்கிறது. விவரக்குறிப்புகள் அடிப்படையில் பார்த்தால் இந்த சாதனம் ஒரு 13எம்பி "லைவ் போட்டோ" அம்சம் கொண்ட பின்புற கேமரா கொண்டுள்ளது.

சிறந்த கேமரா அம்சங்கள்

சிறந்த கேமரா அம்சங்கள்

உடன் எப்/2.0 துளை மற்றும் க்ரூப் செல்பீ மோட் அம்சங்கள் கொண்ட 16 எம்பி. "மூன்லைட்" செல்பீ கேமரா கொண்டுள்ளது. ஒரு சிறந்த விலைக் கட்டத்தில், பிரீமியம் வடிவமைப்பு மற்றும் சிறந்த கேமரா அம்சங்கள் கொண்ட விவோ நிறுவனத்தின் சிறந்த பதிப்பாக இந்த ஸ்மார்ட்போன் கருதப்படுகிறது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

ஸ்மார்ட்போனின் இதர பிரதான அம்சங்களை பொறுத்தமட்டில், இக்கருவி 5.5 அங்குல எச்டி ஐபிஎஸ் (1280 x 720 பிக்ஸல்) டிஸ்பிளே கொண்டுள்ளது. உடன் 1.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியா டெக் எம்டி6750 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

சேமிப்பு

சேமிப்பு

ஒரு 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட இக்கருவி 256 ஜிபி வரை சேமிப்பு விரிவாக்க ஆதரவும் வழங்குகிறது. இரட்டை சிம் மற்றும் ஒரு தனி மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்கள் கொண்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

3000எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படும் "வ்யை69" ஆண்டு ஆண்ட்ராய்டு 7.0 இயக்க முறைமையின் அடிப்படையிலான விவி நிறுவனத்தின் சொந்த பன்டச் (Funtouch) ஒஎஸ் 3.2 கொண்டு இயங்குகிறது.

அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட்

அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட்

ஷாம்பெயின் கோல்ட் மற்றும் மேட் பிளாக் ஆகிய நிறங்களில் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் இ-காமர்ஸ் தளங்களான அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் ஆகியவற்றில் விற்பனைக்கு கிடைக்கும் மற்றும் சில்லறை கடைகளிலும் கிடைக்கும்.

வி7 பிளஸ்

வி7 பிளஸ்

வரும் செப்டம்பர் மாதத்தில் விவோ அதன் வி7 பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவோ நிறுவனம் சமீபத்தில் வி7 சார்ந்த டிரெய்லர் ஒன்றை வெளியிட்டதும், தற்போது கிடைக்கும் விவோ வி5 பிளஸ் மாடலின் அப்கிரேட் கருவியாக வி7 பிளஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4 ஜிபி ரேம்

4 ஜிபி ரேம்

விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில் புதிய க்வால்காம் 660 (அல்லது 630) மேடையில் உள்ள ஒரு சிப்செட், அதன் வழக்கமான 4 ஜிபி ரேம் மற்றும் ஒரு மேம்படுத்தப்பட்ட முழு எச்டி டிஸ்பிளே மற்றும் முன்பக்கம் ஒரு இரட்டை கேமரா ஆகியவைகள் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 660

ஸ்னாப்டிராகன் 660

ஒருவேளை சமீபத்திய க்வால்காம் ப்ராசஸர் இடம்பெறவில்லை என்றாலும் கூட அதன் ஸ்னாப்டிராகன் 660 ஆனது சந்தையில் போட்டியை ஏற்படுத்த போதுமான அம்சமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

செல்பீ ஸ்பெஷலிஸ்ட் நிலை

செல்பீ ஸ்பெஷலிஸ்ட் நிலை

மற்றும் வி7 பிளஸ் ஸ்மார்ட்போனின் முன்பக்கம் எதிர்கொள்ளும் இரட்டை கேமராக்களில் ஒரு நல்ல முன்னேற்றத்தை காண முடியும், மறுகையில் உள்ள செல்பீ கேமரா வழக்கம் போல விவோவின் செல்பீ ஸ்பெஷலிஸ்ட் நிலையை தக்கவைக்கலாம்.

Best Mobiles in India

English summary
Vivo Y69 smartphone with a 16 MP selfie-camera, priced at Rs 14,990, launched in India. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X