அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் விவோ வைய்69.!
விவோ வைய்69 பொதுவாக 1.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர் மற்றும் மீடியாடெக் எம்டி6750 செயலியைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவோ நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி விவோ வைய்69 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. சாம்பெய்ன் தங்கம் மற்றும் மேட் பிளாக் நிறங்கள் இந்த விவோ வைய்69 ஸ்மார்ட்போன் கிடைக்கும்.
விவோ வைய்69 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின்பு விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வலைதளம் மூலம் வாங்க முடியும்.

விலைகுறைப்பு:
விவோ வைய்69 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,990-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.13,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மீடியாடெக்:
விவோ வைய்69 பொதுவாக 1.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர் மற்றும் மீடியாடெக் எம்டி6750 செயலியைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

டிஸ்பிளே:
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது,மேலும் (720-1280)பிக்சல் தீர்மானம் கொண்டவையாகஉள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

3ஜிபி ரேம்:
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 256ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. வீடியோ மிகத்துள்ளியமாக எடுக்கும் வசதி கொண்டுள்ளது இந்த விவோ வைய்69 ஸ்மார்ட்போன்.

இணைப்பு ஆதரவுகள்:
ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

3000எம்ஏஎச்:
விவோ வைய்69 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.மேலும் இன்டர்நெட் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications