16எம்பி செல்பீ கேமரா கொண்ட விவோ ஒய்66.!

Written By:

ரியர் கேமராவாக இருக்கட்டும் அல்லது செல்பீ கேமராவாக இருக்கட்டும் - இரண்டிலுமே ஸ்மார்ட்போன் கேமரா தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திட்ட பெருமை விவோ நிறுவனத்தையே சேரும். அப்படியான விவோ நிறுவனத்தின் சமீபத்திய கருவியொன்று எதிர்பார்த்தபடியே இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

சீன மொபைல் உற்பத்தியாளரான விவோ நிறுவனம் இறுதியாக அதன் விவோ ஒய்66 ஸ்மார்ட்போனை அதன் ஒய் தொடரின் கீழ் மென்மையான ப்ளாஷ் கொண்ட ஒரு 16 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா கொண்ட கருவியாக அறிமுகம் செய்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

உலோக யூனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ள இக்கருவியின் அம்சங்களை பொறுத்தமட்டில் ஒரு 5.5 இன்ச் எச்டி (720x1280 பிக்சல்கள்) கொரில்லா கண்ணாடி 3 பாதுகாப்பு கொண்ட 2.5டி வளைந்த கண்ணாடி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது.

செயலி

செயலி

உடன் இந்த ஸ்மார்ட்போன் அட்ரெனோ 505 ஜிபியூ சேர்த்து, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 430 க்வாட்-கோர் செயலி மூலம் இயங்குகிறது.

சேமிப்பு

சேமிப்பு

மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக அட்டை வழியாக 256ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்ட 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு திறன் கொண்டுள்ளது. உடன் பன்டச் ஓஎஸ் 3.0 கீழ் மூடப்பட்டிருக்கும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்கும்.

கேமரா

கேமரா

பாஸ்ட் சார்ஜ் 2.0 தொழில்நுட்பம் கொண்ட ஒரு 3000எம்ஏஎச் லி-பாலிமர் நீக்க முடியாத பேட்டரி மூலம் இயங்கும் இக்கருவி எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 16-மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது.

இரட்டை சிம்

இரட்டை சிம்

தவிர, கலப்பின இரட்டை சிம், 4ஜி வோல்ட், ப்ளூடூத் 4.1,மைக்ரோ யூஎஸ்பி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் ஆகிய இணைப்புகளும் கொண்டுள்ள இக்கருவி அளவீட்டில் 153.8 X 75,5 X 7.6 மிமீ மற்றும் 155 கிராம் எடையுடையது.

விலை

விலை

ரூ.14,999/- என்ற விலை நிர்ணயம் கொண்டுள்ள இக்கருவியின் விற்பனை நாடு முழுவதும் மார்ச் 20-லிருந்து தொடங்கப்படவுள்ளது. உடன் இக்கருவி க்ரவுன் தங்கம் மற்றும் ரோஸ் தங்கம் ஆகிய இரு வண்ண விருப்பங்களில் வருகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

கட்டிங் எட்ஜ் கேமரா : இனி உங்கள் புகைப்பட ஸ்டைலே மாறும்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Vivo Y66 smartphone launched in India at Rs 14,999, comes with 16MP selfie camera. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot