Home
Mobile

விலைக்குறைப்பு : 16எம்பி செல்பீ கேம் கொண்ட விவோ ஒய்66.!

தற்போது ரூ.13,999/-க்கு கிடைக்கும் விவோ ஒய்66 இந்தியாவில் இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதத்தில் ரூ.14,999/-க்கு அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

By Muthuraj

விவோ அதன் ஒய்66 ( Y66) ஸ்மார்ட்போனிற்கு விலைக்குறைப்பை நிகழ்த்தியுள்ளது. இந்த தகவலை மும்பயை (மகேஷ் டெக்லிகாம்) சார்ந்த மொபைல் போன் சில்லறை விற்பனையாளரான மகேஷ் கத்ரி ட்வீட் பதிவொன்றில் அறிவித்துள்ளார்.

விலைக்குறைப்பு : 16எம்பி செல்பீ கேம் கொண்ட விவோ ஒய்66.!

அதன்படி விவோ ஒய்66 கருவிக்கு ரூ.1000/- விலைக்குறைப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. தற்போது ரூ.13,999/-க்கு கிடைக்கும் விவோ ஒய்66 இந்தியாவில் இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதத்தில் ரூ.14,999/-க்கு அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

உலோக யூனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ள இக்கருவியின் அம்சங்களை பொறுத்தமட்டில் ஒரு 5.5 இன்ச் எச்டி (720x1280 பிக்சல்கள்) கொரில்லா கண்ணாடி 3 பாதுகாப்பு கொண்ட 2.5டி வளைந்த கண்ணாடி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. உடன் இந்த ஸ்மார்ட்போன் அட்ரெனோ 505 ஜிபியூ சேர்த்து, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 430 க்வாட்-கோர் செயலி மூலம் இயங்குகிறது.

விலைக்குறைப்பு : 16எம்பி செல்பீ கேம் கொண்ட விவோ ஒய்66.!

மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக அட்டை வழியாக 256ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்ட 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு திறன் கொண்டுள்ளது. உடன் பன்டச் ஓஎஸ் 3.0 கீழ் மூடப்பட்டிருக்கும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்கும்.

பாஸ்ட் சார்ஜ் 2.0 தொழில்நுட்பம் கொண்ட ஒரு 3000எம்ஏஎச் லி-பாலிமர் நீக்க முடியாத பேட்டரி மூலம் இயங்கும் இக்கருவி எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 16-மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது.

தவிர, கலப்பின இரட்டை சிம், 4ஜி வோல்ட், ப்ளூடூத் 4.1,மைக்ரோ யூஎஸ்பி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் ஆகிய இணைப்புகளும் கொண்டுள்ள இக்கருவி அளவீட்டில் 153.8 X 75,5 X 7.6 மிமீ மற்றும் 155 கிராம் எடையுடையது. இக்கருவி க்ரவுன் தங்கம் மற்றும் ரோஸ் தங்கம் ஆகிய இரு வண்ண விருப்பங்களில் வருகிறது.

Best Mobiles in India

English summary
Vivo Y66 gets a price cut of Rs 1,000. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X