10200எம்ஏஎச் பேட்டரி உடன் களமிறங்கியது புதிய விவோ 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை?
விவோ நிறுவனம் புதிய விவோ ஒய்600எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 10200எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ போன் வெளியாகி உள்ளது. இப்போது விவோ ஒய்600எஸ் ப்ரோ போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
விவோ ஒய்600எஸ் ப்ரோ அம்சங்கள் (Vivo Y600s Pro specifications): 6.83-இன்ச் AMOLED டிஸ்பிளே உடன் புதிய விவோ ஒய்600எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2,800×1,260 பிக்சல்ஸ், எச்டிஆர், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300இ சிப்செட் (6nm octa-core MediaTek Dimensity 7300e chipset) கொண்டுள்ளது இந்த விவோ ஒய்600எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் இந்த விவோ போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ ஒய்600எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
50எம்பி ரியர் கேமரா உடன் இந்த விவோ ஒய்600எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது விவோ ஒய்600எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த விவோ போனில் உள்ளன.
10200எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ ஒய்600எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு மேல் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், பெய்டோ, குளோனாஸ், கலிலியோ உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய விவோ போனில் உள்ளன. மூன்லைட் பிளாக், ஃப்ளோட்டிங் கோல்ட், ஸ்டாரி பர்பிள் மற்றும் வாஸ்ட் ப்ளூ நிறங்களில் இந்த விவோ ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.
தற்போது விவோ ஒய்600எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த விவோ ஒய்600எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை CNY 2,699 (இந்திய மதிப்பில் ரூ.39,000)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications
