அறிமுகமானது புது விவோ 5ஜி போன்.. 8000எம்ஏஎச் பேட்டரி.. IP69 ரேட்டிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் புதிய விவோ ஒய்600ஐ (Vivo Y600i) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் 8000எம்ஏஎச் பேட்டரி, ஐபி69 ரேட்டிங், ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளியாகி உள்ளது. இப்போது விவோ ஒய்600ஐ போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
விவோ ஒய்600ஐ அம்சங்கள் (Vivo Y600i Specifications): 6.87-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் விவோ ஒய்600ஐ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1592 x 720 பிக்சல்ஸ், 1300 நிட்ஸ் பிரைட்னஸ், டிசி டிம்மிங், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்(120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக உள்ளது.

தரமான ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Snapdragon 4 Gen 2) சிப்செட் உடன் விவோ ஒய்600ஐ ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். கேமிங் ஆப்களை இந்த ஸ்மார்ட்போனில் தடையின்றி பயன்படுத்த என்பது குறிப்பிடத்தக்கது.
6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி உடன் விவோ ஒய்600ஐ ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் விவோ ஒய்600ஐ ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.
50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் விவோ ஒய்600ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் விவோ ஒய்600ஐ போன் வெளியாகி உள்ளது. மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனில் உள்ளது. அதேபோல் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) ஆதரவும் இந்த புதிய போனில் உள்ளது.

8000எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ ஒய்600ஐ வெளிவந்துள்ளது. எனேவ இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. டூயல் சிம், 5ஜி, யுஎஸ்பி டைப்-சி, புளூடூத் 5.1 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
தற்போது விவோ ஒய்600ஐ ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போனின் ஆரம்ப விலை 1,999 Yuan (இந்திய மதிப்பில் ரூ.28,573)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications
