Home
Mobile

Vivo போட்ட போடு.. 8.59 மி.மீ ஸ்லிம்ல 10000mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

விவோ நிறுவனத்தின் 10000mAh பேட்டரி கொண்ட மாடலாக விவோ ஒய்600 (Vivo Y600) களமிறங்கி இருக்கிறது. பெரிய பேட்டரி மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களை ரூ.30000 பட்ஜெட்டுக்குள் கொடுத்து இருக்கிறது. இந்த விவோ ஒய்600 ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

விவோ ஒய்600 அம்சங்கள் (Vivo Y600 Specifications): 6.83 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10 (HDR10) கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300இ 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7300e 6nm) சிப்செட்டை இந்த விவோ ஒய்600 கொடுத்துள்ளது.

Vivo போட்ட போடு..  8.59 மி.மீ ஸ்லிம்ல 10000mAh பேட்டரி.. 44W சார்ஜிங்!

ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலும் கிடைக்க இருக்கிறது.

44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 10000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) சப்போர்ட் கிடைக்கிறது. யூஎஸ்பி-சி (USB-C) சார்ஜிங் போர்ட் கிடைக்கிறது. சஃபையர் ப்ளூ, அப்சிடியன் பிளாக் கலர் வேரியண்ட்கள் 8.59 எம்எம் தடிமனில் கிடைக்கிறது. டைமண்ட் கோல்டு 8.6 எம்எம் தடிமனில் கிடைக்கிறது.

அதேபோல சஃபையர் ப்ளூ, அப்சிடியன் பிளாக் கலர் வேரியண்ட்களின் எடை 224 கிராமாக இருக்கிறது. டைமண்ட் கோல்டு வேரியண்ட்டின் எடை 225 கிராமாக இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமராவுடன் இந்த விவோ ஒய்600 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கு 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.

மெயின் கேமராவில் ஆட்டோ போகஸ் மற்றும் 10 எக்ஸ் டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஆக்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) கிடைக்கிறது. மேலும், இன்பிராரெட் ரிமோட் கன்ட்ரோல் (Infrared Remote Control) கொண்ட மாடலாக இந்த விவோ ஒய்600 இருக்கிறது. இப்போது, விலையை பார்க்கலாம்.

6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.28,337 ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.29,755 ஆகவும் இருக்கிறது. மேலும், 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,172 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,425 ஆகவும் இருக்கிறது.

இந்த விலைகள் சீனாவின் யுவான் அடிப்படையில் கொடுக்கப்படதாகும். ஆகவே, அவ்வப்போது மாறக்கூடியது. சஃபையர் ப்ளூ (Sapphire Blue), டைமண்ட் கோல்டு (Diamond Gold) மற்றும் அப்சிடியன் பிளாக் (Obsidian Black) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் வேறு மாடல்களாக களமிறங்கிவருகிறது.

Best Mobiles in India

English summary
Vivo Y600 With 10000mAh Battery MediaTek Dimensity 7300e Chipset Launched Under Rs 30000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X