Home
Mobile

அடுத்த Vivo 5ஜி போன் ரெடி.. 9200mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?

விவோ நிறுவனம் புதிய விவோ ஒய்600 டர்போ (Vivo Y600 Turbo) ஸ்மார்ட்போனை வரும் மே 25-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை பார்க்கலாம்.

விவோ ஒய்600 டர்போ அம்சங்கள் (Vivo Y600 Turbo Specifications): 6.83-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த விவோ ஒய்600 டர்போ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz Refresh Rate), 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியும் உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அடுத்த விவோ 5ஜி போன் ரெடி.. 9200mAh பேட்டரி.. எந்த மாடல்?

மீடியாடெக் டைமன்சிட்டி 8500 சிப்செட் (Dimensity 8500 chipset) உடன் புதிய விவோ ஒய்600 டர்போ ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகம் வழங்கும். அதேபோல் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

5எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்600 டர்போ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய போனில் உள்ளன.

OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய விவோ ஒய்600 டர்போ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற வசதிகளும் இந்த விவோ போனில் உள்ளன. அதேபோல் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதி இந்த போனில் உள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த விவோ 5ஜி போன் ரெடி.. 9200mAh பேட்டரி.. எந்த மாடல்?

9200எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ ஒய்600 டர்போ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளன. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் விவோ ஒய்600 டர்போ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ போன் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்படும்.

Best Mobiles in India

English summary
Vivo Y600 Turbo China Launch Date Announced: check All details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X