மே 25 முதல் VIVO தான் மார்க்கெட் ராஜா.. 9000mAh பேட்டரி, IP69 ரேட்டிங் உடன் புது 5ஜி போன்.. எந்த மாடல்?
ஸ்மார்ட்போன் சந்தையில், மிட்-ரேன்ஜ் விலைப்பிரிவில், பேட்டரி லைஃப் ஒரு முக்கிய குறையாக இருந்து வருகிறது. அதை சரிசெய்யும் நோக்கத்தின் கீழ் விவோ (Vvo) நிறுவனம், நாளை மே 25 ஆம் தேதி அன்று, 9000mAh பேட்டரி கொண்ட ஒரு புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது
அது விவோ ஒய்600 டர்போ (Vivo Y600 Turbo) ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் மூலம் விவோ நிறுவனம் பேட்டரி லைஃப் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த தயாராக இருப்பதாக தெரிகிறது. சீனாவில் நாளை (மே 25) அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக, இந்த ஸ்மார்ட்போனில் மிகப்பெரிய சிறப்பம்சம் அதன் பிரம்மாண்டமான 9000mAh பேட்டரிதான் என்பது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆறு ஆண்டுகள் வரை பயன்பாட்டில், நல்ல செயல்திறனை தக்கவைத்து கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளதாக விவோ கூறுகிறது. மேலும், ஐந்து ஆண்டுகள் வரை சீரான செயல்பாட்டையும் விவோ நிறுவனம் உறுதியளிக்கிறது. இதோடு நீண்ட கால பயன்பாட்டிலும், இந்த ஸ்மார்ட்போன் தொடர்ந்து இயங்குவதை உறுதிசெய்யும் வகையில் சாஃப்ட்வேர் அப்டேட்களும் அணுக கிடைக்கும்.
ஒட்டுமொத்தமாக விவோவின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போனால் பெரிய வேக குறைவுகள் எதுவும் இல்லாமல், ஒரே நேரத்தில் 30 ஆப்கள் வரை பேக்கிரவுண்ட்டில் சீராக இயங்கும். செயல்திறன் மட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்போனில் நீடித்து உழைக்கும் தன்மையிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது போல் தெரிகிறது. விவோ ஒய் 600 டர்போ ஸ்மார்ட்போன் ஆனது, நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69 ரேட்டிங்களை பெற்றுள்ளது.
இமேலும் பல சுற்றுச்சூழல் மற்றும் நீடித்துழைப்பு சோதனைகளில் தாக்குப்பிடிப்பதற்கான சான்றிதழ்களையும் பெற்றுள்ளது. இந்த விலைப் பிரிவில், குறிப்பாக பேட்டரி திறனுக்கு முன்னுரிமை அளிக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு, இது ஒப்பீட்டளவில் அரிதான அம்சங்கள் ஆகும். நாளை அறிமுகத்தையொட்டி, ஏற்கனவே சீனாவில் முன்பதிவுக்கு வந்துவிட்ட இந்த ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் குறித்து எந்த தகவலும் இல்லை
சீனாவில் இது ப்ளூ, ஒயிட் மற்றும் பிங்க் ஆகிய 3 கலர்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேற்குறிப்பிட்ட முக்கிய அம்சங்களை தவிர்த்து விவோ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் முழுமையான அம்சங்களை இன்னும் வெளியிடவில்லை. இருந்தாலும், இந்த ஸ்மார்ட்போன் பிளாக்ஷிப் லெவல் ஆற்றலை விட, நம்பகமான அன்றாட செயல்திறன், நீண்ட பேட்டரி லைஃப் மற்றும் போதுமான மல்டிடாஸ்கிங் திறன்களை தேடும் பயனர்களை இலக்காக கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவோவின் புதிய "பேட்டரி சென்ட்ரிக்" உத்தியானது சமீபகாலமாக அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. அதிக திறன்களை முன்னிறுத்துவதற்கு பதிலாக, இந்நிறுவனம் நீண்ட கால பேட்டரி லைஃப், சிறந்த குறைந்த வெப்பநிலை செயல்திறன் மற்றும் ஒட்டுமொத்த ஆயுட்காலம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது. இக காம்பினேஷன் வாடிக்கையாளர்களையும் ஈர்க்கிறது.
ஒவ்வொரு இரவும் தங்கள் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்வதில் சோர்வடைந்த பயனர்களுக்கு, விவோ ஒய்600 டர்போ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் மிகவும் சுவாரஸ்யமான மிட்-ரேன்ஜ் விலை அறிமுகங்களில் ஒன்றாக அமையக்கூடும். மிகப்பெரிய பேட்டரி, மேம்பட்ட ஆயுள் மதிப்பீடுகள் மற்றும் விவோவின் மென்பொருள் மேம்படுத்தல் குறித்த கூற்றுகள் ஆகியவற்றின் மூலம், இந்த போன் முதன்மையாக நீண்ட நேரம் இயங்கும் திறன் கொண்ட ஒரு ஸ்மார்ட்போனாகவே நிலைநிறுத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது. விலை மற்றும் விரிவான அம்சங்கள் நாளை இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆனதும் உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications