Home
Mobile

வேட்டைக்காரன் VIVO.. 8.29மிமீ ஸ்லிம் டிசைனில் 9020mAh பேட்டரி.. புது 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ (Vivo) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆக விவோ ஒய்600 டர்போ மாடல் இன்று (மே 25) சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது. இது விவோ ஒய்600 ப்ரோ மாடலுக்கு பிறகு, விவோவின் இரண்டாவது பிக் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 9020mAh (டிபிக்கல் 9000mAh) திறன் உள்ளது.

1200 சார்ஜ் சுழற்சிகளுக்கு பிறகும் கூட இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி குறைந்தபட்சம் 80% ஆயுளை தக்க வைத்து கொள்ளும் என்று விவோ நிருவனம் கூறுகிறது. மேலும் இது 90W ஃபாஸ்ட் சார்ஜிங், ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் மற்றும் குளோபல் டைரக்ட் பவர் சப்ளை ஆகியவற்றையும் ஆதரிக்கிறது.

வேட்டைக்காரன் VIVO.. 8.29மிமீ ஸ்லிம் டிசைனில் 9020mAh பேட்டரி!

பெரிய அளவிலான பேட்டரியை கொண்டிருந்தாலும் கூட, விவோ ஒய்600 டர்போ ஸ்மார்ட்போன் ஆனது வெறும் 8.29 மிமீ தடிமனும், 215 கிராம் எடையும் கொண்டுள்ளது. டூன் கோல்ட், எலக்ட்ரிக் ப்ளூ மற்றும் மில்லினியம் பிங்க் ஆகிய 3 கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ ஒய்600 டர்போ ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது, 1.5கே ரெசல்யூஷன் (2800×1260) கொண்ட 6.83-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் மற்றும் 1.07 பில்லியன் கலர்களை ஆதரிக்கிறது. மேலும், கண்களுக்கு இதமான 4320Hz ஹை பிரெக்வன்சி PWM டிம்மிங் வசதியையும் கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை இந்த போன், 4nm செயல்முறையில் உருவாக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 மொபைல் பிளாட்ஃபார்மில் இயங்குகிறது. இது LPDDR4X ரேம் மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜை பயன்படுத்தி, 12GB வரையிலான ரேம் மற்றும் 512GB இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் பணிகளை அட்ரினோ 810 ஜிபியு கையாள்கிறது.

கேமராக்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்பனில் 50MP ப்ரைமரி ரியர் கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் உள்ளது, அதே நேரத்தில் முன்புறத்தில் 8MP செல்பீ கேமரா உள்ளது. முன்புற மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டும் EIS ஸ்டெபிலைசேஷனை ஆதரிக்கின்றன, மேலும் பின்புற கேமராவால் 4கே வீடியோ வரை பதிவு செய்ய முடியும்.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இந்த போன் OriginOS 6 இல் இயங்குகிறது மற்றும் 5ஜி இணைப்பு, வைஃபை 6, ப்ளூடூத் 5.2, என்எப்சி, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் பல நேவிகேஷன் சிஸ்டம்களை ஆதரிக்கிறது. கடைசியாக இது IP68 மற்றும் IP69 ரேட்டிங் மூலம் நீர் மற்றும் தூசி உட்புகுதல் பாதுகாப்பையும் வழங்குகிறது.

விவோ ஒய்600 டர்போ ஸ்மார்ட்போனின் விலை: 8GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட பேஸிக் மாடல், சீனாவில் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.32,400 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வரையிலாக இந்த ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் உறுதி செய்யப்படவில்லை. இந்திய சந்தையில் ஏற்கனவே பல ஒய் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால், இதையும் நாம் விரைவில் எதிர்பார்க்கலாம்.

இதேபோலே பிக் பேட்டரி உடன் முன்னதாக இந்தியாவில் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போனை பொறுத்தவரை 7000mAh பேட்டரி உடன் விவோ வி70 எப்இ 5ஜி (Vivo V70 FE 5G) மாடல் இந்தியாவில் அறிமுகம் ஆகி இருந்தது. இந்தியாவில் விவோ வி70 எப்இ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.37,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக உள்ள 8ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி வேரியண்ட்கள் முறையே ரூ.40,999 மற்றும் ரூ.44,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Best Mobiles in India

English summary
Vivo Y600 Turbo 5G With 9020mAh Battery Launched in China Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X