Home
Mobile

பிரிச்சி விட்டாப்ல.. 10200mAh பேட்டரி.. OLED பேட்டரி.. 12GB ரேம்.. ஏப்.27 க்கு புது Vivo போன்.. எந்த மாடல்?

விவோ (Vivo) நிறுவனம் அதனுடயை பெரிய பேட்டரி மாடலான விவோ ஒய்600 ப்ரோ (Vivo Y600 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. 2 ஸ்மார்ட்போன்களுக்கு நிகரான பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடலாக வெளியாக இருக்கிறது. டிசைன், கலர், வெளியீட்டு தேதி உறுதியாகி இருக்கிறது.

சீனா மற்றும் இந்திய மார்கெட்டில் பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனுக்கு மிகப்பெரும் வரவேற்பு இருக்கிறது. இப்போது, 7000mAh பேட்டரி, 8000mAh பேட்டரி மற்றும் 9000mAh பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடல்கள் சர்வ சாதாரணமாக கிடைக்க தொடங்கிவிட்டன. இந்தியாவில் ரியல்மி பி4 பவர் 5ஜி (realme P4 Power 5G) ஸ்மார்ட்போன் 10001mAh பேட்டரியுடன் கிடைக்கிறது.

பிரிச்சி விட்டாப்ல.. 10200mAh பேட்டரி.. OLED பேட்டரி.. 12GB ரேம்!

இப்போது, விவோ நிறுவனமும் 10000mAh பேட்டரி ஸ்மார்ட்போனுக்கு ரெடியாகிவிட்டது. ஆனால், ரியல்மி நிறுவனத்தைவிட 199mAh கூடுதலாக 10200mAh பேட்டரியுடன் இந்த விவோ ஒய்600 ப்ரோ ஸ்மார்ட்போனை களமிறக்க இருக்கிறது. ஆனால், சீன மார்கெட்டில் முதலில் வெளியிட இருக்கிறது. பிறகு குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் எதிர்பார்க்கலாம்.

வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி சீன மார்கெட்டில் இந்த விவோ ஒய்600 ப்ரோ ஸ்மார்ட்போன் களமிறங்க இருக்கிறது. டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்ட டிசைன் மற்றும் கலர் வேரியண்ட்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆகவே, இந்த விவோ ஒய்600 ப்ரோ ஸ்மார்ட்போனில் ப்ளோட்டிங் கோல்டு (Floating Gold), ஸ்டார்ரி பர்பிள் (Starry Purple) கலர்கள் உள்ளன.

மேலும், பிரைட் மூன் பிளாக் (Bright Moon Black), வாஸ்ட் ப்ளூ (Vast Blue) கலரும் கிடைக்க இருக்கிறது. டிசைனில் 50 எம்பி கேமரா கிடைக்க இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், சிப்செட், ரேம், ஸ்டோரேஜ் மற்றும் டிஸ்பிளே உள்ளிட்ட முக்கிய பீச்சர்கள் ஏற்கனவே மார்கெட்டில் கசிந்துவிட்டன.

பிரிச்சி விட்டாப்ல.. 10200mAh பேட்டரி.. OLED பேட்டரி.. 12GB ரேம்!

விவோ ஒய்600 ப்ரோ அம்சங்கள் (Vivo Y600 Pro Specifications): 6.83 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன் கிடைக்க உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கொடுக்கப்பட உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மட்டுமல்லாமல், 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்க உள்ளது.

12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. 10200mAh பேட்டரி கிடைக்க இருப்பதால், 8.15 எம்எம் தடிமன் கிடைக்கிறது. 221 கிராம் எடை கொடுக்கப்பட்டு உள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதத்திலேயே விவோ ஒய்500 ப்ரோ (vivo Y500 Pro) ஸ்மார்ட்போன் வெளியாகியது. ஆனால், இந்த விவோ ஒய்600 ப்ரோ முன்னதாகவே வெளியாக இருக்கிறது.

விவோ ஒய்500 ப்ரோ ஸ்மார்ட்போனில் 7000mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைத்தது. மேலும், ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 4nm) சிப்செட் கொடுத்தது. 6.67 இன்ச் (1260 x 2800 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைத்தது.

200 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஆனால், விவோ ஒய்600 ப்ரோ ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா மட்டுமே கிடைக்க உள்ளது. விவோ ஒய்500 ப்ரோ ஸ்மார்ட்போனின் 12 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.33,000 பட்ஜெட்டில் இருந்தது. ஆகவே, மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் ஒய்600 ப்ரோ கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y600 Pro With Dimensity 7300e 12GB RAM 10200mAh Battery Launching in China on April 27
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X