யாரு சாமி அவன்.. ரூ.28,922 போதும்.. 10200mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?
விவோ நிறுவனத்தின் பெரிய பேட்டரி கொண்ட மாடலாக விவோ ஒய்600 ப்ரோ (Vivo Y600 Pro) அறிமுகமாகி இருக்கிறது. 10200mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. மேலும், மீடியாடெக் டைமன்சிட்டி 7300இ சிப்செட் கிடைக்கிறது. இந்த விவோ ஒய்600 ப்ரோ ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சீன மார்கெட்டில் இந்த விவோ ஒய்600 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. இருப்பினும், குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் வெளியாகும் என்பதால், ஒட்டுமொத்த விவோ பிரியர்களிடையேயும் எதிர்பார்ப்பு இருக்கிறது. சீன வெர்ஷனில் கொடுக்கப்பட்ட பீச்சர்கள் குளோபல் வெர்ஷனிலும் கிடைக்க வாய்ப்புள்ளது.

விவோ ஒய்600 ப்ரோ அம்சங்கள் (Vivo Y600 Pro Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300இ 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7300e 6nm) சிப்செட் மற்றும் மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. மேலும், லேட்டஸ்ட் விவோ மாடல்களில் கிடைக்கும் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.
3810 எம்எம் விசி லிக்விட் கூலிங் சிஸ்டம் (VC Liquid Cooling System) கொண்டுள்ளது. 6.83 இன்ச் (1260 x 2800 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த விவோ ஒய்600 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளேவாக இது இருக்கிறது. மேலும், எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+) கிடைத்து உள்ளது.
4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் P3 வைடு கலர் காமட் கிடைத்துள்ளது. 8 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. 50 எம்பி மெயின் கேமரா + சிஎம்ஓஎஸ் (CMOS) சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது.
எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், ஆட்டோ போகஸ் கிடைக்கிறது. மேலும், 10எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (Digital Zoom) கிடைக்கிறது. நைட் மோட், போர்ட்ராய்டு மோட் உள்ளிட்ட பீச்சர்களை கொடுக்கிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 2எக்ஸ் ஜூம் கொடுத்துள்ளது. 1080p வீடியோ ரெக்கார்டிங் கொண்ட மாடலாக இருக்கிறது. ஆகவே, கேமரா சிஸ்டம் பெரிதாக இல்லை.
ஆனால், பேட்டரி சிஸ்டம் மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. ஏனென்றால், இந்த விவோ ஒய்600 ப்ரோ ஸ்மார்ட்போனில் 10200mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. மேலும், ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுத்துள்ளது. பெரிய பேட்டரி இருந்தும் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது.
மூன்லைட் பிளாக் (Moonlight Black), வாஸ்ட் ப்ளூ (Vast Blue), ஸ்டார்ரி பர்பிள் (Starry Purple) மற்றும் ப்ளோட்டிங் கோல்டு (Floating Gold) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 8 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.28,922ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,678ஆகவும் இருக்கிறது.
மேலும், 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,813ஆகவும், மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,813ஆகவும் உள்ளது. இந்த விலைகள் சீனாவின் யுவான் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. ஆகவே, மாறுதல்கள் இருக்கும். மே 5ஆம் தேதி சீனாவில் விற்பனை தொடங்குகிறது. குளோபல், இந்திய மார்கெட்டில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications