Home
Mobile

மார்க்கெட்டே அதிர போகுது.. 10000mAh பேட்டரி.. வருகிறது புதிய விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் 10000எம்ஏஎச் பேட்டரி கொண்ட புதிய போனை அறிமுகம் செய்ய உள்ளது விவோ நிறுவனம்.

அதாவது வரும் வாரங்களில் விவோ ஒய்600 ப்ரோ எனும் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது விவோ நிறுவனம். குறிப்பாக இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் அனைத்து நாடுகளிலும் அறிமுகாகும்.

மார்க்கெட்டே அதிர போகுது..  வருகிறது புதிய விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ ஒய்600 ப்ரோ அம்சங்கள் ( Vivo Y600 Pro Specifications): 10000எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ ஒய்600 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

பவர் பட்டன் மற்றும் வால்யூம் கண்ட்ரோல்கள் போனின் வலது பக்கத்தில் உள்ளன. இந்த விவோ போனில் 50எம்பி டூயல் ரியர் கேமராக்கள் உள்ளன. தற்போது விவோ ஒய்600 ப்ரோ போனின் சில விவரக்குறிப்புகள் மட்டுமே வெளியாகி உள்ளன. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் சமீபத்தில் இந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த விவோ டி5 ப்ரோ 5ஜி போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ டி5 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo T5 Pro 5G Specifications): தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 எஸ்ஒசி (Octa Core Snraapdgon 7s Gen 4) சிப்செட் உடன் இந்த விவோ டி5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.

அதேபோல் 6.83-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் விவோ டி5 ப்ரோ 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

குறிப்பாக OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் இந்த விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் 12ஜிபி வரை மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன்.

அதுவும் 50எம்பி Sony IMX882 மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது விவோ டி5 ப்ரோ 5ஜி போன். குறிப்பாக இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது. இந்த செல்பி கேமராவும் 4கே வீடியோ பதிவு செய்யும். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மார்க்கெட்டே அதிர போகுது..  வருகிறது புதிய விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?

யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. P68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த போன் வெளியாகி உள்ளது.

மேலும் 9020mAh பேட்டரி மற்றும் 90W சார்ஜிங் உடன் புதிய விவோ டி5 ப்ரோ 5ஜி போன் வெளியாகி உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 பிஇ, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), கியூஇசட்எஸ்எஸ் (QZSS), புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 213 கிராம் ஆகும். விவோ டி5 ப்ரோ 5ஜி போனின் ஆரம்ப விலை ரூ.29,999-ஆக உள்ளது.

Photo Credit: Weibo/ Vivo

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y600 Pro with 10000mAh battery will be launched soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X