Home
Mobile

சம்பவம் இருக்கு! 10200mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் இன்னும் சில நாட்களில் விவோ ஒய்600 ப்ரோ (Vivo Y600 Pro) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த விவோ ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமான சில வாரங்களில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். இந்நிலையில் விவோ ஒய்600 ப்ரோ போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

விவோ ஒய்600 ப்ரோ அம்சங்கள் (Vivo Y600 Pro Specifications): 6.83-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் இந்த புதிய விவோ ஒய்600 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2800 × 1260 பிக்சல்ஸ், 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

சம்பவம் இருக்கு! வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

தரமான மீடியாடெக் டைமென்சிட்டி 7300இ (Dimensity 7300e) உடன் இந்த விவோ ஒய்600 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி - ஜி610 எம்சி2 ஜிபியு (Mali-G610 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவுடன் இந்த விவோ ஒய்600 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் விவோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மறறும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என ஐந்து வேரியண்ட்களில் இந்த விவோ ஒய்600 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(In-display Fingerprint Sensor), IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய விவோ ஒய்600 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

50எம்பி டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது விவோ ஒய்600 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

10200mAh பேட்டரி உடன் புதிய விவோ ஒய்600 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஆகவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு மேல் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

இந்த புதிய விவோ போனின் எடை 221 கிராம் ஆகும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photos credits: gizmochina

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y600 Pro full specifications leaked online: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X