Home
Mobile

வச்சான் பாரு விவோ.. பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?

விவோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் மாடலான விவோ ஒய்60 (Vivo Y60) ஸ்மார்ட்போன், வெளியாகி இருக்கிறது. 6500mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், எஸ்ஜிஎஸ் டிராப் மற்றும் ஷாக் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. 120Hz டிஸ்பிளே மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் கிடைக்கிறது. இந்த விவோ ஒய்60 ஸ்மார்ட்போனின் முழு விவரங்கள் இதோ.

சீன மார்கெட்டில் இந்த விவோ ஒய்60 ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. பட்ஜெட் விலையில் கிடைக்க இருப்பதால் குளோபல் மார்கெட்டிலும் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. ஏற்கனவே, இந்திய மார்கெட்டில் விவோ ஒய்50 ஸ்மார்ட்போன் வெளியாகி இருப்பதால், இந்த மாடல் மீதான எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆகவே, இதை பார்த்துவிடலாம்.

வச்சான் பாரு விவோ.. பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. மாடல்?

விவோ ஒய்60 அம்சங்கள் (Vivo Y60 Specifications): 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. வாட்டர்டிராப் நாட்ச் டிஸ்பிளே மாடலாக இருக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Qualcomm Snapdragon 4 Gen 2) சிப்செட்டை கொண்டுள்ளது. ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) பேஸ்டு ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது.

6500mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுத்துள்ளது. 13 எம்பி மெயின் கேமரா மற்றும் ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கிடைக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக முன்பக்கத்தில் 5 எம்பி கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது.

மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட டாப் எண்ட் வேரியண்ட்டும் கிடைக்கிறது. பக்காவான டியூரபிலிட்டி கொண்ட பட்ஜெட் மாடலாக இந்த விவோ ஒய்60 ஸ்மார்ட்போன் இருக்கிறது. IP65 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உள்ளது. எஸ்ஜிஎஸ் ஃபைவ்-ஸ்டார் டிராப் மற்றும் ஷாக் ரெசிஸ்டன்ஸ் (Drop & Shock Resistance) கொடுக்கப்பட்டு உள்ளது.

8.39 எம்எம் தடிமன் மற்றும் 209 கிராம் எடை கொடுத்துள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கிடைக்கிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ, ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), டூயல் பேண்ட் வை-பை (Dual-band Wi-Fi), ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டிகளை கொடுத்துள்ளது. இப்போது விலை விவரங்களை பார்க்கலாம்.

விவோ ஒய்60 விலை (Vivo Y60 Price): 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25,321 ஆகவும், 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.28,136ஆகவும் இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32,358ஆக இருக்கிறது. சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் வெளியாவது குறித்து விரைவில் தெரியவரும்.

ஷாங்ஹாய்க்கிங் ப்ளூ (Shanhaiqing Blue), லக்கி பர்பிள் (Lucky Purple) மற்றும் அப்சிடியன் பிளாக் (Obsidian Black) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்திய மார்கெட்டில் விவோ ஒய்50 (Vivo Y50) ஸ்மார்ட்போன் வெளியாகிவிட்டது. ரூ.17990 பட்ஜெட்டில் வெளியாகியது. இது 4ஜி மாடலாக இருக்கிறது. ஆகவே, விவோ ஒய்60 வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Vivo Y60 With 6500mAh Battery 8GB RAM Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X