Home
Mobile

சிட்டாக பறக்கும் ஆர்டர்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. இந்தியாவில் புதிய Vivo 5ஜி போன் அறிமுகம்..

விவோ நிறுவனம் தனது விவோ ஒய்58 5ஜி (Vivo Y58 5G) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 6000எம்ஏஎச் பேட்டரி, 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், ஸ்னாப்டிராகன் சிப்செட் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. இப்போது விவோ ஒய்58 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, அம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ ஒய்58 5ஜி அம்சங்கள் (vivo Y58 5G specifications): 6.72 ஃபுல் எச்டிபிளஸ் (FHD+) எல்டிசி (LCD) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ ஒய்58 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 2408×1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1024 நிட்ஸ் HBM பிரைட்னஸ், 1400: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.

சிட்டாக பறக்கும் ஆர்டர்..  இந்தியாவில் புதிய Vivo 5ஜி போன் அறிமுகம்..

8ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வசதியுடன் விவோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ரெயிட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ ஒய்58 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட் டைனமிக் லைட் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வசதி இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Octa Core Snapdragon 4 Gen 2 ) சிப்செட் உடன் இந்த விவோ ஒய்58 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

ஃபன்டச் ஓஎஸ் (Funtouch OS) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் விவோ ஒய்58 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்புசைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம் (Stereo speaker setup), 300% ஆடியோ பூஸ்டர் ( 300% audio booster), 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் விவோ ஒய்58 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) மற்றும் டியூவி ரெயின்லேண்ட் லோவ் ப்ளூ லைட் சர்டிஃபிகேஷன் (TUV Rheinland Low Blue Light Certificati on) கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய விவோ போன்.

சிட்டாக பறக்கும் ஆர்டர்..  இந்தியாவில் புதிய Vivo 5ஜி போன் அறிமுகம்..

6000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது விவோ ஒய்58 5ஜி போன். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது இந்த போன். டூயல் சிம், 5ஜி (5G), டூயல்-பேண்ட் வைஃபை (Dual-band WiFi), புளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி ( USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன.

8ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்58 5ஜி போனின் விலை ரூ.19,499-ஆக உள்ளது. பின்பு பிளிப்கார்ட், விவோ இ-ஸ்டோர் தளங்களில் இந்த போனை வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Y58 5G launched in India: check specifications, price, offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X