ஜூன் 20 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. வருகிறது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ ஒய்58 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. 6000எம்ஏஎச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது விவோ ஒய்58 5ஜி போனின் அறிமுக தேதி மற்றும் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
விவோ ஒய்58 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஜூன் 20-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ ஒய்200டி ஸ்மார்ட்போனை உள்ளது இந்த விவோ ஒய்58 5ஜி போன். அதுவும் டூயல் ரியர் கேமராக்கள், எல்இடி ஃபிளாஷ் மற்றும் ரிங் ஃபிளாஷ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

விவோ ஒய்58 5ஜி அம்சங்கள் (vivo Y58 5G specifications): 6.72 ஃபுல் எச்டிபிளஸ் (FHD+) எல்டிசி (LCD) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ ஒய்58 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 2408×1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
8ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த விவோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
50எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ ஒய்58 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வசதி இதில் உள்ளது.
அதேபோல் நைட் சீன் (Night Scene), போர்ட்ராய்டு (Portrait), மைக்ரோ மூவி (Micro Movie), ஹை-பிக்சல் (High Pixel) போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளன. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm) சிப்செட் உடன் இந்த விவோ ஒய்58 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) மற்றும் ஓர்ஜின் ஓஎஸ் 4 (Origin OS 4) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த சாதனம் எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

6000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் விவோ ஒய்58 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டுயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 6 (Wi-Fi 6) கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவரும்.
குறிப்பாக ரூ.20,000-க்கு கீழ் விவோ ஒய்58 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications