Home
Mobile

இளைஞர்களைக் கவரும் புதிய விவோ 5G ஸ்மார்ட்போன்: அறிமுக தேதி இதுதான்.! ரெடியா இருங்க!

இளைஞர்களைக் கவரும் வகையில் விவோ நிறுவனம் இந்தியாவில் புதிய விவோ Y56 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இணையத்தில் வெளிவந்த தகவலின்படி, இந்த புதிய ஸ்மார்ட்போன் நாளை (பிப்ரவரி 15) அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ Y56 அம்சங்கள்

குறிப்பாக இந்த விவோ Y56 போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும். இப்போது ஆன்லைனில் வெளிவந்த விவோ Y56 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த விவோ Y56 ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

இளைஞர்களைக் கவரும் புதிய விவோ 5G ஸ்மார்ட்போன்: அறிமுக தேதி இதுதான்.!

இந்த புதிய விவோ Y56 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை கேமிங் பயனர்கள் நம்பி வாங்கலாம். பின்பு Funtouch OS சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

விவோ Y56 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் மாடல்.

இளைஞர்களைக் கவரும் புதிய விவோ 5G ஸ்மார்ட்போன்: அறிமுக தேதி இதுதான்.!

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா வசதியுடன் இந்த விவோ Y56 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களுடன் வெளிவரும் இந்த அசத்தலான
ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த விவோ Y56 ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். அவ்வளவு சீக்கிரம் சார்ஜ் குறையாது. பின்பு 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன்.

இளைஞர்களைக் கவரும் புதிய விவோ 5G ஸ்மார்ட்போன்: அறிமுக தேதி இதுதான்.!

விவோ Y56 விலை

அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ லு56 ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் ரூ.18,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விவோ Y56 ஸ்மார்ட்போன் மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விவோ நிறுவனம் தற்போது 5ஜி ஸ்மார்ட்போன்களை மட்டும் அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. அதாவது இந்தியாவில் தற்போது 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் தான் அதிக வரவேற்பு உள்ளது.

இளைஞர்களைக் கவரும் புதிய விவோ 5G ஸ்மார்ட்போன்: அறிமுக தேதி இதுதான்.!

எனவே தான் விவோ நிறுவனம் 5ஜி போன்களை அதிகமாக அறிமுகம் செய்கிறது. அதேபோல் இந்நிறுவனம் விரைவில் பட்ஜெட் விலையில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ எக்ஸ்90 மற்றும் விவோ எக்ஸ்90 ப்ரோ

அதேபோல் விவோ நிறுவனம் சர்வதேச சந்தையில் விவோ எக்ஸ்90 மற்றும் விவோ எக்ஸ்90 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் சோனி கேமரா சென்சார், தரமான சிப்செட் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளன. குறிப்பாக ஒன்பிளஸ் 11 போன்களுக்கு போட்டியாக இந்த விவோ எக்ஸ்90 மற்றும் விவோ எக்ஸ்90 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் வெளிவந்துள்ளன.

Best Mobiles in India

English summary
Vivo Y56 smartphone will be launched in India on February 15: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X